LNCrawler

ஆட்டம்-1

ஆட்டம் — www.smtamilnovels.com · All chapters

ஆட்டம்-1

ஆட்டம்-1

1994

பொள்ளாச்சி

சதுரங்க ஆட்டம் சந்திரஞ்சா , அஷ்டபாதா என இரு பெயர்களில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டது . இந்தியாவில் உருவான சந்திரஞ்சா காலப்போக்கில் சதுரங்க விளையாட்டாக மருவியது .

பொள்ளாச்சியில் உள்ள அந்த அரண்மனையின் மிக ப் பகட்டான ராஜ அறை அது. அரண்மனையின் மிகப்பெரிய அறையும்கூட . அதன் நடுவே இருந்தது அந்தச் சதுரங்கப் பலகை .

வெறும் சதுரங்க ப் பலகை அல்ல அது.

வெள்ளையன் வெளியேறும்போது இந்த அரண்மனையை ஆண்ட அரசருக்கு , அவரின் அறிவின் ஆற்றலையும் துணி வையும் வீ ரத்தையும் கண்டு வியந்து பரிசாகத் தந்துவிட்டுச் சென்ற , உலகிலேயே மிகத் தரமான விலையுயர்ந்தக் கல்லால் செய்யப்பட்டப் பலகை அது.

ஆட்டம் சில மணி நிமிடங்களுக்கு முன்பே தொடங்கியதற்கு அறிகுறியாக இரு பக்கமும் , வீரர்களும் படைகளும் கலைந்திருந்தது . இரு ராணிகளும் முன்னேற்றப்பட்டிருந்தனர் .

ஒரு பக்கம் பொன்னால் ஆன சதுரங்கக் காய்களும் , மறுபக்கம் வன்பொன்னும் ( Platinum) வெள்ளியும் பிணைந்து ஆன சதுரங்கக் காய்களும் தங்கள் செழுமையையு ம் இ ராஜரீகத்தையும் எடுத்துரைக்கத் தனது பொன் ராணியை நகர்த்தியது ஒரு கரம். கரத்தின் சொந்தக்காரனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை. விழியில் ஒரு துடிப்பு.

தனது ராணியை அவன் மறுபக்கம் நகர்த்தியிருக்க , மறுபக்கம் இருந்தவனும் தனது ராணியைப் பணயம் வைக்கத் துணிந்தான் . அவன் விழியில் வாகையைத் தேடும் பளபளப்பு. எப்போதும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கும் ஒரு வெறி.

தனது இடதுகை பெருவிரலால் தனது வலது புருவத்தை வருடினான் . அது அவனின் பழக்க வழக்கங்களில் ஒன்று. அவனுக்குத் தேவையானதை அடையும்போதோ அல்லது முக்கியமான நொடிகளிலோ அவன் இதை ச் செய்வது வழக்கம்.

ஒரு கர்வ ப் புன்னகையுடன் , தனது ராணியை த் தான் இழந்துவிட மாட்டோம் என்ற நம்பிக்கையுடனும் , இதழோரத்தில் தோன்றியப் புன்னகையுடனும் தனது வன்பொன் ராணியை எதிர்ப்பக்கம் நகர்த்தி வைத்தான் சித்தார்த் அபிமன்யு .

சித்தார்த் அபிமன்யு . ஏழு வயதை அடைந்த இந்த அரண்மனையின் மூத்த வாரிசு. முடிசூடா அடுத்த அரசன்.

அதற்கே உடைய திமிரையும் நிமிர்வையும் இவ்வயதிலேயே மிக அதிகம் கொண்டவன். தன்னைச் சுற்றி நிகழும் சிறிய நிகழ்வைக் கூட காணாமலேயே அறிபவன்.

இவ்வயதிலேயே அளந்து பேசும் குணமும் , எதிரில் இருப்பவரை எளிதில் எடை போடும் எண்ணமும் , அடுத்தவரை ஆட்டி வைக்கும் திறமும் கொண்டு , எதிர்காலத்தில் தன் கண்ணசைவில் எதிரில் இருப்போரை இருக்கும் இடம் தெரியாது வைக்கப்போகும் இளம் சக்கரவர்த்தி.

அனைத்தும் அவன் பாட்டனாருடையப் பயிற்சி.

தனது ராணியை சித்தார்த் அபிமன்யு நகர்த்தியவுடன் , எதிரில் இருந்தவனின் விழிகளில் ஒரு கூர்மை.

அவன் விக்ரம் அபிநந்தன் .

அபிமன்யுவின் சகோதரன் .

அபிமன்யுவின் தந்தையும் வி க்ரமின் தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள்.

அபிமன்யுவை விட விக்ரம் நான்கு மாதம் சிறியவன்.

அவன் வேகம் என்றால் விக்ரம் விவேகம். சத்ரிய வல்லமை அதிகம் வாய்ந்த தளபதி அவன். நுண்ணறிவு , சிந்தனை , கவனம் , முடிவெடுத்தல் , மதிப்பீடு , நினைவகம் அனைத்தும் ஒருங்கே அமைந்த சாணக்கியனின் புத்தி அவனுக்கு.

எதிர்காலத்தில் அனைவரையும் தன் முடிவால் கதிகலங்க வைக்கப் போகும் சத்ரியன் .

அடுத்த நகர்வுக்காக அவன் தனது கரத்தை , காயை நகர்த்த முடிவெடுக்க எடுத்தபோது , அரண்மனையின் கீழ் ஒரே பரபரப்பும் , ஓங்கியச் சத்தமும் .

அடுத்த நொடியே தேக்கும் சந்தனமுமான நாற்காலியில் இருந்து எழுந்த இருவரும் , வேகமாக அறையைவிட்டு வெளியேற , செல்லும் அவசரத்தில் தங்கள் ராணிகள் எதிர்ப்பக்கம் இருப்பதை மறந்தனர் .

இனித் தங்கள் ராணிகள் தங்களிடம் வர , பல வருடங்கள் ஆகும் என்பதை இந்த விளையாட்டு உணர்த்தியதை இருவருமே அறியவில்லை.

சிவப்பு க் கம்பளம் விரித்திருந்த படிகளில் இருவரும் வேஷ்டி சட்டையில் ஓடி வர , மொத்த குடும்பமும் அங்கு கூடியிருந்தது .

இரண்டு மணி நேரத்திற்கு முன்.. .

அரண்மனை கல்யாண அலங்காரத்தில் ரா ஜ க ளை யோடு ஜொலித்துக் கொண்டிருக்க , மேளங்களும் குதிரை ப் படைகளும் வெளிநாட்டு கார்களும் கம்பீரமாக அரண்மனைக்கு வெளியே இருந்து தங்கள் செல்வாக்கை காட்டிக் கொண்டிருக்க , டிசம்பர் மாத காலைப்பொழுது ஐந்து மணி என்பதால் , சிவகாசியில் இருந்து சிம்மவர்ம பூபதி வரவழைக்கப்பட்ட வானவேடிக்கை சிவப்பும் த ங்கமும் ப ச்சையுமாக வானில் பூவாய்ச் சிதறி மின்ன , அன்று சுற்றியிருந்த ஊரில் இருந்த அனைவரும் எழுந்தது என்னவோ இதன் சத்தங்களில்தான் .

சிம்மவர்ம பூபதி தற்போது அந்த அரண்மனையின் முடிசூடா மன்னன். ஆளுக்கேற்ற பெயர்.

சிம்மத்தின் கர்ஜனை , அதிகாரம் , தோரணை , ஆணவம் , கர்வம் அனைத்தும் ஒருங்கே தனக்கேச் சொந்தம் என்ற உரிமை கொண்டவர் , தன்னிடம் ஒருவர் பேசுவதற்கே தகுதித் தராதரம் வேண்டும் என்று நினைப்பவர் . எதிலும் விட்டுக் கொடுப்பவரும் கிடையாது அவர்.

வெள்ளையன் ஒருவன் தன் ஊர்ப் பெண்ணின் மீது கை வைக்க முனைந்ததிற்கே , அவனின் தலையை இரண்டு தலைமுறைக்கு முன் வெட்டி வீசிய பரம்பரை இது. வழிவழியாக வந்த வீரமும் சரி , கர்வமும் சரி வானைத் தொடும் அளவுக்கு ஏ றி யதே அன்றி சிறுதுளி கூடக் குறைந்தது கிடையாது.

சிம்மவர்ம பூபதி அந்தக் காலத்திலேயே வெளிநாடு சென்று படித்து வந்தவர் என்பதால் , அவருக்கு அந்த ச் செருக்கும் சற்று அதிகம்தான் . அதுவே அவருக்கு அழகும்கூட . இன்றும் குறையாத வேகத்தையும் விவேகத்தையும் உயிராக வைத்திருப்பவர் , யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டதில்லை .

ஏன் உயிரினும் மேலாய் இருக்கும் செல்ல மகளுக்காக க் கூட , அவர் தன்னை மாற்றிக் கொண்டதில்லை .

பிடிவாதமும் , வீம்பும் அவர் இரத்தத்தில் ஊறியிருக்க , கெ ளரவமும் , வீராப்பும் , தான் எங்கின்ற வெறியும் உடலெங்கும் பரவியிருக்க , இன்று மகளின் திருணத்தில் ராஜாவாக வ ளை ய வந்து கொண்டிருந்தார் சிம்மவர்ம பூபதி .

அரண்மனையின் இரண்டாவது தளத்தில் , வரவேற்பறையின் பொதுவான நூறு பேர் நிற்க கூடிய பால்கனி போன்ற அமைப்பில் நின்றுகொண்டு , வான வேடிக்கையைப் பார்த்தவரின் மீசைக்குக் கீழிருந்தத் தடித்த இதழ்கள் சிரிப்பில் விரிய , கணவரின் பல் வரிசை தெரியும் சிரிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த இமையரசி , இந்த வயதிலும் கணவரின் கம்பீரத்தையும் , முகத்தில் மின்னிய தேஜஸையும் கண்டு ரசிகையாகினார் .

காதலுக்கும் ரசனைக்கும் வயது ஏது ?

இமையரசி . மெய்யாலுமே அந்த அரண்மனையின் அரசிதான் . பெண் பார்க்கச் சென்றபோது அந்த இமையழகில் வீழ்ந்தவர்தான் சிம்மவர்ம பூபதி . இன்றும் எழவில்லை.

தங்க நிறப் பட்டுப் புடவையில் நின்ற மனைவியைத் திரும்பிப் பார்த்தவர் , “ ஓஹ் இன்னிக்கு சிங்கிள் ப்ளீட்ஸா ?” என்று கேட்டவர் , “ அழகா இருக்க அரசி ” என்றிட , மேலே வான வேடிக்கையைப் பார்த்திருந்தவர் கணவனின் குரலிலும் சொ ற்களிலும் புன்னகைத்தபடியே அவரிடம் தலையைத் திருப்பினார் .

மனைவியைத் திரும்பிப் பார்த்தவர் , “ இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அரசி. நம்ம பொண்ணுக்கு கல்யாணம். அதுவும் அவளுக்கு புடிச்ச உன் தம்பி விஜயவர்தன் கூட. என் மாப்பிள்ளையோட. இந்த உலகத்துல என்னைவிட யாரும் சந்தோஷமா இருக்கவே முடியாது ” சத்தமாக வானைப் பார்த்துக் கூறியவர் , மனைவியைப் பார்க்க அவருக்கும் அதேதான் மனதில்.

இமையரசிக்கு இன்று மனம்விட்டு பேசும் கணவனைக் கண்டு மிக ப் பிரமிப்பாய் இருந்தது. திருமணமான இத்தனை வருடங்களில் அவர் இப்படி பேசிக் கண்டில்லாதவர் , இன்றுதான் கணவனை இப்படி காண்கிறார்.

புடவை முந்தியை முன்னேக் கொண்டு வந்தவர் , “ கல்யாணம் முடிஞ்சவுடனே நீராஜாவுக்கு சுத்திப் போடணும்ங்க . எல்லாரும் ரொம்ப அழகா இருக்கா அழகா இருக்கானு சொல்லியே என் காதை அடச்சுட்டாங்க . அதுவும் உங்க அத்தை ஒருபடி மேல போய் , ராணி மாதிரி ஜொலிக்கறா உன் பொண்ணுனு சொல்லி … அப்பப்பா ” என்றிட , மனைவியின் தோளின் மீது கைப் போட்டு அருகில் இழுத்தவர் , “ எம் பொண்ணு ராணிதான்டி ” என்றார் கண்களில் வானளவு கர்வம் மின்ன , வார்த்தைகளில் கடலளவு பெருமை பொங்க .

கணவனின் விழிகளில் வழிந்த கர்வத்தைக் கண்டு இமையரசி புன்னகைக்க , “ இனி என்னோட ட்ரெயினிங் எல்லாம் அபிமன்யுவும் விக்ரமும்தான் ” அவர் முடிவாக க் கூ ற ,

கணவனைவிட்டு விலகிய இமையரசி , கையெடுத்தே கும்பிட்டுவிட்டார் .

“ இந்த அரண்மனைக்கு ஒரு சிம்மவர்ம பூபதி போதும். உங்கள பாத்து எல்லாரும் பயப்படறதே போதும். இப்பவே இரண்டு பேரும் உங்கள மாதிரியே பாக்கறாங்க , நடந்துக்கறாங்க . என் பசங்களே பரவாயில்லை. அதுவும் அபிமன்யு எல்லாரையும் இப்பவே அதட்டறான் . விக்ரம் ஒரு பக்கம் எங்க என்ன பேசுனா என்ன நடக்கும்னு பண்றான் . போதும் போதும் உங்களோட பயிற்சி” அவர் கொட்ட , மனைவி படபடப்புடன் பேசுவதைக் கண்டவர் , மனைவியை ரசிக்கத் துவங்க , இந்த வயதிலும் கணவரின் பார்வையைக் கண்டவருக்கு பேசிக் கொண்டிருந்தது திக்கிவிட்டது .

“ என்ன பார்வை இந்த வயசுல ” சின்னக் குரலில் கேட்டவர் அவரின் பார்வையைத் தவிர்த்துவிட்டு வெளியே பார்க்கத் துவங்க , “ என்னோட ஜீன் எல்லாமே என் பேரப் பசங்களுக்கு இருக்கும்டி . நான் சொல்லித் தரணும்னு அவசியமே இல்ல . என்னோட ரொமான்ஸ் மொதக்கொண்டு ” அவர் மனைவியைப் பின் நின்று அவர் இருபக்க தோள்களிலும் கை வைத்தபடி கூ ற ,

கணவனைத் திரும்பிப் பார்த்தவர் , “ பாவம் என் பேத்திக ” என்று பேரன்களின் மனைவிகளை இப்போதே எண்ணிப் பாவமாக அ வர் கூ ற , மனைவியின் மூக்கைப் பிடித்து ஆட்டியவர் , “ வர வர கிழவிக்கு வாய் அதிகமாகிடுச்சு ” என்றார்.

பின்னே கல்யாணமானப் புதிதில் இவரின் மீசைக்குப் பயந்தே கணவனை நிமிர்ந்து பார்க்கவில்லை இமையரசி . சிம்மவர்ம பூபதிக்கு அவரை நிமிர வைக்கவே ஒரு திங்கள் கடந்துவிட்டது.

அதை இப்போது நினைத்து அவர் சிரிக்க , கணவரின் முகம் போனப் போக்கை வைத்தே கண்டுபிடித்து , நாணிச் சிவந்தவர் கணவரின் தோளில் தலைசாய , அத்தனை நிம்மதி இருவருக்கும் .

“ இப்ப எல்லாம் அபியும் விக்கியும் சண்டை போடற மாதிரியே முறைச்சிட்டு நிக்கறாங்க … பயமா இருக்குங்க இரண்டு பேரையும் நினைச்சா ” இமையரசி இமை மூடியபடி கணவனிடம் முறையிட ,

“ அதெல்லாம் இந்த வயசுல இருக்கிறதுதான் . நம்ம அரிமாவும் அ தியர னும் கூடதான் அப்படி இருந்தாங்க. இப்ப அப்படி இல்லியே ?” அவர் தேற்ற , “ அரசி” என்று அழைத்தபடி சிம்மவர்ம பூபதியின் அத்தை வர ,

“ பெரியம்மா வர்றாங்க ” என்றவர் கணவனிடம் இருந்து விலகினார் .

வந்தவர் இமையரசியை அழைத்துச் செல்ல , கீழே வந்தவர் மகளின் அறையை நோக்கிச் சென்றார் .

சிம்மவர்ம பூபதிக்கு இரட்டைச் சிங்கங்களாக இரண்டு மகன்கள். மூத்தவர் அரிமா பூபதி , இளையவர் அதியரன் பூபதி .

இராஜக ளை யும் வீ ரமும் இரு மகன்களுக்கும் குறையாது சிம்மவர்ம பூபதி தந்திருக்க , இரு மகன்களையும் வெளிநாட்டில் படிக்க அனுப்பியவர் , இருவரும் நாடு திரும்பியப் பின் , இருவரையும் சென்னையில் தொழில் தொடங்க வைத்தார்.

அதீத அறிவும் க ற்பூர புத்தி க்கூ ர்மையும் ரா ஜதொழில் யுக்தியும் இருவருக்கும் இயற்கையிலேயே இருக்க , மூன்றே வருடங்களில் தென் னி ந்தியாவின் சிறந்த தொழில் அதிபர்கள் ஆனார்கள் இருவரும்.

அடுத்த வருடத்திலேயே அரிமா பூபதிக்கு அழகி என்ற பெண்ணைத் திருமணம் முடித்து வைத்தார் பெரியவர். பெயருக்கேற்றவள் அழகி. அந்தத் திருமணத்திலேயே அதியரனின் விழிகளும் , அழகியின் தங்கையான கோதையின் விழிகளும் உரசிக்கொள்ள , அடுத்த வருடத்தில் அவர்களின் திருமணமும் முடி ந்தது.

அடுத்த ஆறு மாத த்தில் சித்தார்த் அபிமன்யு பிறந்தான். அன்னையைப் படாதபாடு படுத்தியவன் , எதற்கும் அஞ்சாத பாட்டனையே உள்ளுக்குள் அரண்டு போய் நடுநடுங்க வைத்துதான் பிறந்திருந்தான் . இரண்டு உயிரில் ஒன்றை தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூற , அனைவரையும் அலற வைத்து பிறந்தவன் , தன் தாயையும் காப்பாற்றினான்.

அடுத்த தலைமுறையின் மூத்த வாரிசு. அதுவும் சிம்மவர்ம பூபதியின் பிறந்தநாள் அன்றே பிறந்திருந்தான் . சொல்லவா வேண்டும் ?

அவனைக் கொஞ்சி கொஞ்சியே அந்தக் குட்டி அபிமன்யுவை அப்போதே கோபப்பட வைத்து , அவன் குட்டிக் கால்களில் உதை வாங்கிவிட்டனர் .

அடுத்த வருடத்திலேயே விக்ரம் அபிநந்தனும் பிறக்க , சிம்மவர்ம பூபதி , பேரன்களுடனே இருந்தார். இமையரசியைச் சொல்லத் தேவையில்லை.

சிம்மவர்ம பூபதிக்கும் , இமையரசிக்கும் மகன்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த தங்கச் சிலை அவர்களது செல்ல மகள். நீரஜா சிம்மவர்ம பூபதி . ‘ உலக அழகிப் போட்டிக்கு சென்றிருந்தால் வென்றிருப்பாளோ ? ’ என்று அனைவரும் யோசிக்கும் அளவுக்கு பிரம்மன் அவளுக்கு அழகை அள்ளித் தெளித்திருந்தார் .

சாமுத்ரிகா சாஸ்திர வகையில் பத்மினி வகையை ச் சேர்ந்த நீரஜா , தன் பெயருக்கேற்ற தாமரை மலர் போலவும் , லட்சுமி தேவியின் முக லட்சணமும் கொண்டு , எப்போதும் பொன் போன்று ஜாஜ்வ ல் லியமாக மின்னுபவர் .

கருவிழியை ஹனி ப்ரவுன் ( Honey Brown) நிறம் கொண்டு பிறந்த நீரஜாவின் விழிகள் சிரித்தாலும் சரி , முறைத்தாலும் சரி , அவருக்கு முன் அவரின் வதனத்தில் பிரம்மன் செதுக்கியிருந்த அழகிய விழிகள் உணர்வுகளை பிரதிபலித்துவிடும் . அன்னையைப் போன்ற இமையும் , தந்தையைப் போன்றப் பார்வையும் , அதிலிருந்த தேன் நிற விழியும் , செந்தாமரை மலர் க்க ண்ணில் இருந்து வரும் கதிரவனுக்குச் சமமான ஒ ளி வீச்சும் , ஒருவரை அடக்கியே விடும்.

வதனத்திற்கு ஏற்ப விழிகள் , விழிகளுக்கு ஏற்ப பொட்டு வைக்க மட்டுமே இடம்விட்டு நெ ரு க்கமாக நீண்டு , பெண்ணின் இடைபோல வளைந்துக் கூராக இறங்கிய புருவங்கள் , தாமரை மொட்டுப் போன்ற எடுப்பான நாசி , பாலில் நனைத்து எடுத்தது போன்ற பஞ்சு கன்னங்கள் , மலைத்தேன் குடியிருக்கும் பன்னீர் ரோஜா நிற இதழ்கள் , அவர் ஐந்தரை அடி உயரத்திற்கு ஏற்ப நீண்டக் கழுத்து , அதற்குக் கீழே செதுக்கிய சிற்பக் கொடியாக உடல் வனப்பு , சிறு வயதில் இருந்து வாள் வீச்சு , சண்டைப் பயிற்சி கற்றுத் தேர்ந்ததிற்கு அடையாளமாக அந்த வனப்பினுள் தெரிந்த கம்பீரமும் தை ரியமும் தி டமும் எ வைக்கு எவை அழகு என்றே தெரியாத அளவுக்கு முழு ஓவியம் அவர்.

“ நீரஜா !” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்த இமையரசிக்கு , நீரஜா முதுகுக் காட்டி மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்திருந்தார் . சுற்றியும் உறவுக்காரப் பெண்கள் அவளை மொய்த்துக் கொண்டிருந்தனர் .

“ நீரஜா இத போட்டுக்க இல்ல இதப்போடு …” இரண்டு அண்ணிகளும் இரு பக்கமும் இரு வைர நெக்லஸை வைத்துக் கொண்டுச் சொல்ல ,

“ போதும் அண்ணி போதும். இந்த நகையே இனாஃப் ( enough )” என்றார் நீரஜா . தற்போதுதான் மருத்துவம் படித்து முடித்த நீரஜாவுக்கு , தாய் மாமனோடு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

விஜயவர்தன் , இமையரசியின் தம்பி. தம்பி என்றால் அதியரன் பூபதிக்கும் அவருக்கும் ஒரே வயதுதான் . மகளுக்குத் திருமணமான பின்பு இமையரசியின் தாயிற்கு கரு உருவாக நான்கு மாதங்கள் வரை அவருக்கே தான் கருவுற்றிருப்பது தெரியவில்லை. அவர் தன் வயதின் காரணத்தால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

நான்கு மாதங்களுக்குப் பிறகு தெரிந்த பின் , என்ன செய்ய முடியும் என்று அவரும் அந்த வயதில் மகனைப் பெற்றெடுத்தார் .

சிறிய வயதில் தன்னிடம் குழந்தையாக வந்த மச்சான் என்பதால் சிம்மவர்ம பூபதிக்கு மச்சானின் மேல் அலாதி பிரியம். அவரும் மருத்துவம் படிக்க அவரைப் பார்த்துதான் நீரஜாவும் , “ நான் மாமா மாதிரியே எம்பிபிஎஸ் படிக்கறேன் ” என்று படித்தது.

இருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் படிக்க , சிறிது நாளிலேயே மகளுக்கு மாமன் மேல் பிரியம் இருப்பதை மறைமுகமாக அறிந்து கொண்டார் சிம்மவர்ம பூபதி . முதுகலை முடித்து ஊருக்கு வந்த விஜயவர்தன் , அவ்வப்போது சென்னை சென்று வந்தார்.

விஜயவர்தனின் போக்கை கவனித்த சிம்மவர்ம பூபதி , மகளைப் பார்க்கத்தான் வர்தன் சென்னை செல்கிறான் என்று தெரிந்து கொண்டார் . அதுவும் இருவரும் கடற்கரையில் வைத்து சந்தித்தது எல்லாம் அவர் காதுக்கு வந்தடைந்தது . மகள் படிப்பை முடித்தவுடன் திருமணம் என்று முடிவெடுத்தவர் , இன்று இருவரின் ஆசை ப் படியே திருமணத்தை ஏற்பாடும் செய்துவிட்டார் .

ஆசை மகள் எது கேட்டும் , எதில் ஆசைப்பட்டும் அவர் மறுத்ததில்லையே !

“ நீரஜா !” இமையரசியின் குரலில் பெண்கள் விலக அன்னையைத் திரும்பிப் பார்த்தார் நீரஜா .

அந்தக் காலத்திலேயே நீரஜாவிற்கு ட்ரை கலர் பட்டுப் புடவையை நெய்து கொடுத்திருந்தார் காஞ்சியில் இருந்த புகழ்பெற்ற நெசவாளர். வாடாமல்லி நிறத்தில் தங்க ஜரிகைகளோடு புடவை பெண்ணவளின் மாராப்பு பக்கம் தழுவி இருக்க , இடைக்குக் கீழே கதிரவன் காலையில் தன் கதிர்களைப் பரவச் செய்தது போன்ற ஆரஞ்சு வண்ணமும் சேலையை நனைத்திருக்க , மெரூன் நிறத்தில் மெய்பொன்னில் நெய்யப்பட்டிருந்தது பெரியப் பட்டையான கரை.

“ அம்மா” என்று எழுந்து நின்ற நீரஜாவை , அன்னையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார் . இளைய ராணிக்கே உண்டான கம்பீரமும் , வதனத்தில் ஏறியிருந்த மிடுக்கும் , எழுந்து நின்ற ராஜ தோரணையும் பரம்பரை பரம்பரையாக அவர்களின் வீரத்தைச் சொல்லாமல் சொல்ல , பிரமித்து ப் போய் நின்றார் இமையரசி .

மகளின் அருகே அடியெடுத்து சென்றவர் , “ ரொம்ப அழகா இருக்க நீரஜா ” என்றார் இமையரசி மகளின் தோள்களைப் பிடித்துக் கொண்டு.

இன்னும் இமையசைக்கவில்லை இமையரசி . பிரமிப்பும் அகலவில்லை .

அன்னை தன் பெயர் சொன்னதைக் கேட்ட நீரஜா அவரை பொய்யாய் முறைத்துவிட்டு , “ நீரஜா சிம்மவர்ம பூபதி ” என்றார் தலையைச் சற்று நிமிர்த்திக் கம்பீரமாக.

“ இன்னும் கொஞ்ச நேரத்துல நீரஜா விஜயவர்தன் ” என் இரு அண்ணிகளும் கேலி செய்ய ,

“ நெவர் . எப்பவுமே நான் நீரஜா சிம்மவர்ம பூபதிதான் . அப்பாவோட பேரை விட்டுத் த ர மாட்டேன்” ஆள்காட்டி விரலை அசைத்து அவர் சொன்ன விதத்தில் , அனைவரும் அசந்துதான் போயினர்.

“ ம்கூம் ” என்ற சிம்மவர்மரின் செருமலில் , அனைவரும் திரும்ப , தந்தையைக் கண்ட அனைவரும் வாய் மூடி அமைதியாக நிற்பதைக் கண்ட நீரஜா , சா தா ரணமாகச் சிரித்துக் கொண்டு தந்தையின் அருகே சென்றவர் தந்தையின் கால்களில் விழுந்து வணங்கி எழ , மகளை ஆசிர்வதித்தவர் , மகளின் கைகளைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டு அருகே நிற்க வைத்து , “ என் பொண்ணு என்னை மாதிரி” என்றார் மீசையை அட்டகாசமாக முறுக்கியபடி .

“ அரசி உன் தம்பி ரெடியான்னு பாரு. ஐயர் நேரம் ஆகிடுச்சுன்னு சொல்றாரு ” அவர் கூற , தம்பியின் அறைக்குச் சென்றார் இமையரசி . சிறிய வயதில் இருந்து விஜயவர்தன் இங்கேயே வளர்ந்ததால் , அவருக்கும் இவ்வீட்டு வாரிசுகளுக்கு உண்டான அனைத்து உரிமையும் உண்டு.

ஐந்து நிமிடத்தில் அறைக்குள் வந்த அதியரன் பூபதி தந்தையின் காதில் எதையோ கூற , அவரின் முகம் மாறியது . மகளிடம் சமாளித்துப் புன்னகைத்தவர் மருமகள்களிடம் மகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியேற அரைமணி நேரம் கடந்தது.

“ ஐயோஓ !” என்ற இமையரசியின் அலறலில் அறைக்குள் இருந்த பெண்கள் அனைவரும் நெஞ்சம் அதிர வெளியேற , வெளியே வர எத்தனித்த நீரஜாவை , “ நீ இங்கையே இரு நீரஜா ” என்றனர் கோதையும் அ ழகியும் . ஆனால் , அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தும் நீரஜாவுக்கு கேட்காமல் இல்லை.

“ இப்படி என் பொண்ணை ஏமாத்திட்டு போயிட்டானே ” என்று கையிலிருந்த லெட்டரை வைத்துக்கொண்டு இமையரசி அழத் துவங்க , கூடியிருந்த உறவினர்கள் கூட்டம் அனைவருக்கும் ஓரளவு புரியத் துவங்கியது.

கணவனிடம் திரும்பிய இமையரசி , “ என்னை மன்னிச்சிடுங்க ” என்று கைக் கூப்பி , தம்பிக்காகக் கணவனிடம் மன்னிப்பை யாசித்தார் . எங்கே உடன் பிறந்தவனுக்கு ஏதாவது கணவனால் ஆகிவிடுமோ என்று பயம்.

அதுவும் விஜயவர்தன் சென்றிருந்தது நீரஜாவின் நெருங்கிய தோழி ரஞ்சனியுடன் .

அனைவருக்கும் விஷயம் பரவ , அறைக்குள் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார் நீரஜா . சற்று நேரத்திற்கு முன் கூறிய , ‘ எப்பவுமே நான் நீரஜா சிம்மவர்ம பூபதிதான் ’ என்ற வாக்கியம் அவரைப் பார்த்து சிரித்தது .

எவ்வளவு ஆசையுடன் இந்த நாளை அவர் எதிர்பார்த்தார். ஆனால் , இந்நாள் அவ ரு க்கு இப்படியொரு கெடுதலைச் செய்திருக்க , அவரின் ஹனி ப்ரவுன் கருவிழிகள் வரை கண்ணீர் நிரம்பி தேங்கி நிற்க , அதற்கு மேல் முடியாமல் உடை ந்து விட்டார் .

ஏமாற்றத்தைச் சந்தித்திடாத நெஞ்சம் இன்று முதன்முதலாகக் காதலுக்காகக் கதறியது.

“ கல்யாணம் நிக்க வேணாம் . நம்ம சொந்தத்துல ஒரு பையனா இப்பவே பாத்து கல்யாணத்தை முடிங்க ” யாரோ பேசுவது கேட்க , ஏற்கனவே உள்ளுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளின் விளைவாக அழுது கொண்டிருந்தவருக்கு இது செவியில் விழ , பிடிவாதமும் வீம்புமாக இருக்கையில் இருந்து புயலின் வேகத்தோடு எழுந்தார்.

கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு , கதவை அனைவரும் அதிரும் வண்ணம் படீரென்று திறந்து கொண்டு வெளியே வந்தவர் அனைவரையும் நேராகப் பார்த்து , “ இதே முகூர்த்தத்துல வேற பையனை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு எங்கப்பா பணம் இல்லாம இல்ல . அதே மாதிரி என் மனசு தெரியாதவரும் இல்ல ” முகத்தில் அடித்தாற் போன்று அனைவருக்கும் சரியாகக் கூற ,

“ ஏம்மா நல்லது கெட்டது …” என்று சிலர் துவங்க ,

“ என்னோட வாழ்க்கைக்கு எது நல்லது கெட்டதுனு எங்க அப்பாக்கு தெரியும்” என்றவர் எதிர்பார்ப்போடு தந்தையைப் பார்த்தார்.

எப்போதும் கௌரவம் பார்ப்பவருக்கு மகளின் தேன் நிற விழிகள் அவளின் வேதனையையும் , அந்த விழிகள் வழியாக அவள் வலியையும் உணர்ந்தவர் , “ என் பொண்ணு சொல்றதுதான் . கல்யாணம் நின்னதுக்கு யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு என் பொண்ணு குறைஞ்சிடல ” என்று கூற , பெண் சிங்கமாய் நிமிர்ந்து நின்றார் நீரஜா .

பெண்சிங்கமாய் அவர் கர்ஜனையோடும் தன்னம்பிக்கையோடும் நிற்க , அவரின் இரு பக்கமும் வந்து , அவரின் கைகளை ஒன்று உறுமலோடும் ஒன்று தோரணையோடும் இறுகப் பற்றி , வெறி கொண்ட இரட்டை வேங்கைகளாகச் சீறிக் கொண்டு ஆக்ரோஷத்துடன் நிற்க , எவருக்கும் அதை மீறிப் பேசத் துணிவில்லை .

சஞ்சலத்துடன் நின்றிருந்த சிம்மவர்ம பூபதி , மகளைக் கைவிடாது நின்றப் பேரன்களின் தோரணையையும் , தன் அத்தைக்கு எதிராக எதிரில் நின்றிருப்பவர்களைப் பார்க்கும் கூர் பார்வையையும் , யார் வந்தாலும் வருங்காலத்தில் அவர்களைத் தாண்டியே தன் மகளின் மீது கை வைக்க முடியும் என்பது , அவர்களின் செவ்வதனம் இறுகியிருந்த அழுத்தத்தையும் தி மிரையும் கண்டவர் , ‘ தன் வளர்ப்பு பொய்யாகவில்லை ’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தைரியமாய் நின்றார்.