LNCrawler

ஆட்டம்-45

ஆட்டம் — www.smtamilnovels.com · All chapters

ஆட்டம்-45

ஆட்டம்-45

“ நறு !”

அந்த மாளிகையின் வாயிலில் இருந்த படிகளில் அமர்ந்து மகளுக்காக கலக்கத்துடன் காத்திருந்து எழுந்த நீரஜா , காரிலிருந்து இறங்கிய மகளைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள , “ ம்மா !” என்றவளும் அன்னையை இறுக அணைத்தாள்.

வீட்டில் ஆண்களுக்கு விஜய் விஷயத்தைக் கூறியிருக்க , அவரவர் அவர்கள் மனைவிகளிடம் விஷயத்தை மெதுவே கூறியிருந்தார்கள் .

திலோவுக்கு மட்டும் விஷயம் தெரியாது. கௌதமும் கூறவில்லை . கூறவும் தோன்றவில்லை அவனுக்கு. அவளின் செவிகளுக்கு தேவையில்லாத விடயம் என்று யாருமே அவளிடம் உரைக்கவில்லை .

“ உயிரே போயிடுச்சுடி ” என்று பதட்டம் குறையாது கூறிய நீரஜாவிடம் இருந்து விலகிய நறுமுகை , அன்னையை நாணத்துடன் பார்த்து வைக்க , நீரஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

இதழ்கள் கடித்து , இமை தாழ்த்தி , மீண்டும் தன் ஹனி ப்ரவுன் விழிகளை கொண்டு அன்னையின் ஹனி ப்ரவுன் விழிகளை , செந்த ண லாய் மாறிப் போன மலர் வதனம் கொண்டு சந்தித்தவள் , “ அம்மா!” என்று வெட்கத்தில் எச்சிலை விழுங்கினாள்.

நறுமுகை வந்து அழுவாள் , அது இதுவென்று அனைவரும் நினைத்திருக்க , யாரும் அவளின் இந்த நாணத்தை எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் பதட்டத்தில் இருந்தவர்களுக்கு பெண்ணவளின் செய்கையில் குழப்பங்களே மிஞ்சியது.

அனைவரும் விக்ரமை பார்க்க , கோதையோ மகனிடம் , “ விக்ரம் என்னாச்சு ?” என்று பதட்டத்துடனே வினவ , விக்ரமும் மனைவியின் செயலில் தானும் புன்னகைக்க , அபிமன்யுவும் , கௌதமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சியையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் .

அழகியும் , “ என்னாச்சு விக்ரம் ?” என்று சின்ன மகனிடம் கேட்டபடி நறுமுகையின் அருகே வந்து அவளின் கரத்தை பிடித்தார் .

அதியரன் பூபதியும் , “ விக்ரம் என்னாச்சு ?” சற்று கடுமையாக கேட்க , நறுமுகையின் அருகே சென்று அவளின் தோளில் கை போட்டு அழுந்தப் பிடித்து , அருகில் இழுத்து வைத்துக் கொண்டவன் , தன் முன்னிருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு இறுதியாக நீரஜாவிற்கு வந்தவன் , தன் வசீகரமும் ஆண்மையும் கலந்த புன்னகையை துளியும் மாற்றவில்லை .

“ இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும் அத்தை… நாங்க எவ்வளவு பெரிய பசங்க ஆனாலும் உங்க முன்னாடி அதே ஆறு வயசு பசங்க தான்னு …” என்று ஒற்றை கையால் அவர் கன்னம் பற்றியவன் , அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகி ,

“ ஆனா , இப்ப ரொம்ப பெரிய பசங்க ஆகிட்டோம்னு தோணற மாதிரி இருக்கு” என்றிட , அப்போதும் நீரஜாவிற்கு புரியவில்லை.

பல் வரிசைகள் பிரகாசமாய் மின்ன , அவரின் கரத்தை பிடித்து குலுக்கியவன் , “ கங்கிராட்ஜுலேஷன் மாமியாரே … பாட்டியா ப்ரமோட் ஆகியிருக்கீங்க ” என்று கூற , நீரஜா மருமகன் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் மூழ்கி திளைக்க , மற்றவர்களை பற்றி கூறவா வேண்டும் !

அனைவரின் உள்ளமும் எல்லையில்லா ஆனந்தத் தாண்டவமாட , அடுத்த விநாடி விக்ரமை தள்ளி , அனைவரும் நறுமுகையை சுற்றிக் கொண்டனர் .

அனைவரும் அவளை விடாது கொஞ்ச , ‘ ஹார்ட் வொர்க் பண்ண என்னை யாராவது பாராட்டறாங்களா பாரு ‘ என்று உள்ளுக்குள் அடித்துக் கொண்டவனின் அருகே வந்தார் சிம்மவர்ம பூபதி .

அவனையே அவர் பார்த்துக் கொண்டிருக்க , விக்ரமிற்கு தான் சங்கோஜமுமாக இருந்தது. பேரனின் தோளைத் தட்டியவர் , “ நீ இப்ப சொன்ன ஒரு செய்தியால மொத்த குடும்பமும் நடந்ததை மறந்து எப்படி இருக்கு பாரு… ரொம்ப பெரிய பையன் தான் விக்ரம் நீ” என்றவர் பேரனை அணைத்துக் கொள்ள , தந்தையான பூரிப்புடன் தாத்தாவின் பாராட்டை பெற்ற தேஜஸும் சேர்ந்துகொள்ள அழகாய் புன்னகைத்தவன் , சிம்மவர்ம பூபதியை அணைத்துக் கொண்டான்.

சின்ன பேரனை அணைத்தபடியே , பெரிய பேரன் காரில் ஒரு கரம் வைத்து சாய்ந்து நிற்பதைக் கண்ட சிம்மவர்ம பூபதியின் மனம் சட்டென வாடிய மலர் போன்று சுணங்கியது .

அனைவரையும் வாழ்வில் இணைத்து வைத்தவன் அவன்!

அவன் இல்லையெனில் இந்த மொத்த இன்பமும் சாத்தியமா ?

அவனால் தான் இப்போது அனைவரின் இதழ்களிலும் புன்னகை உறைந்திருக்கின்றது !

ஆனால்…

அனைவரின் மகிழ்ச்சிக்கும் விதை விதைத்தவன் , இன்றும் புன்னகை மாறாது தள்ளி நின்று ரசிப்பதைக் கண்ட சிம்மவர்ம பூபதி , உத்ராவை தேட , அவளோ நறுமுகையின் கரம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் .

பேரனின் புன்னகைக்கு பின்னிருந்த மனநிலையும் , மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நிலைகளும் பெரியவராக புரிந்து கொண்டவருக்கு தெரியும் , வெளியே இறுக்கத்துடனும் , அதிகாரத்துடனும் , ஆளுமையுடனும் வலம்வரும் அபிமன்யுவின் ஆழ் மனம் எவ்வாறு என்று.

பேத்தியையும் பேரனையும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்ற இமையரசி , நறுமுகையை விடாது கொஞ்சிக் கொண்டிருக்க , புன்னகையும் மகிழ்ச்சியுமாக அதை கண்டு கொண்டிருந்த உத்ராவிற்கு , ஏதோ ஒன்று உறுத்த , நிமிர்ந்து பார்த்தவளுக்கு கணவனின் பார்வை தன் மேல் பதிந்திருப்பது புரிய , இருவரின் உணர்ச்சிகளற்ற பார்வைகளும் உரசிக்கொள்ள , நிதானமாக உத்ராவை அளந்த அபிமன்யுவின் விழிகள் மீண்டும் நறுமுகையிடம் செல்ல , உத்ராவின் மனம் சொல்ல இயலாத தவிப்பில் ஆட்கொண்டது .

இத்தனை நேரமும் அனைவரிடமும் ஒன்றி நின்றிருந்தவள் , அப்போது தான் அனைவரும் நறுமுகையை விழுந்து விழுந்து கவனிப்பதை உணர்ந்தாள். அனைவரின் முகத்தையும் பார்த்தவளுக்கு , அப்போது தான் பதிந்தது சிம்மவர்ம பூபதி தன்னை கவனித்துக் கொண்டிருப்பதை .

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தாத்தாவை பார்த்தவள் , “ தாத்தா” என்று சப்தம் வராது இதழை மட்டும் அசைக்க , முதல் முறை அவரின் குற்றம் சாட்டும் பார்வையை கண்டு மனம் கலங்கிப் போக , கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவரின் பார்வையில் தெறிந்த கோபத்தில் , காட்ட முடியாத திருப்தியின்மையில் , அவரிடம் இருந்து பெற்ற முதல் சினத்தில் சிறு பெண்ணவள் உள்ளம் சுணங்கிப் போனாள்.

“ வா அபி சாப்பிடலாம்” இமையரசி பேரனை அழைக்க ,

“ நாங்க சாப்பிட்டோம் பாட்டி… நீங்க பாருங்க ” என்றவன் புன்னகையுடன் அறைக்கு செல்ல முயல , அபிமன்யு கடக்கும் முன் எழுந்த விக்ரம் , அவனுக்கு எதிரே நிற்க , இருவரும் எதிரெதிராக நிற்பதைக் கண்ட அனைவருக்கும் மூளையில் மின்சாரம் தாக்கி , உள்ளத்தில் சுனாமியை உணர்ந்த அதிர்வுகள் உண்டாகி மேனி எங்கும் பரவியது .

எதுவும் களேபரம் ஆகிவிடக்கூடாது என்று அனைத்து பெண்களும் சிறு பயத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க , யாரும் எதிர்பாராத வண்ணம் , தன் ஒட்டுமொத்த பிடிவாதம் , வீம்பு , திமிர் , ஆணவம் அனைத்தையும் கைவிட்ட விக்ரம் அபிநந்தன் , தன் சகோதரன் சித்தார்த் அபிமன்யு தோளோடு தோள் இறுக அணைத்தான்.

உலகின் எட்டாவது அதிசயம்!

அனைவரின் இதழ்களும் நடந்து கொண்டிருந்த சம்பவத்தில் விரிந்துகொள்ள , அடுத்து அபிமன்யு அதற்கு என்ன பதில் வேலை செய்யப் போகிறானோ என்று அனைவரும் எதிர்பார்ப்பும் அச்சமுமாய் காத்திருக்க , சரியாக பத்து விநாடிகள் கழித்து , சகோதரனை சித்தார்த் அபிமன்யுவும் இறுக அணைக்க , அங்கிருந்த அனைத்து பெண்களின் விழிகளும் கலங்கிவிட்டன.

உலகின் ஒன்பதாவது அதிசயம்!

இதுவரை இருவரின் பிடிவாதம் அறிந்து யாரும் , ‘ பேசுங்கள் ‘ என்று கேட்டுக் கொண்டது கூட இல்லை!

வீட்டிலும் சரி! நண்பர்கள் வட்டத்திலும் சரி!

இப்படி ஒரு நிகழ்வை யாரும் கனவில் கூட எதிர்பார்த்தது கிடையாது!

அனைவரின் மனதிலும் மெய்யாக சிறிய வயதில் பார்த்த சித்தார்த் அபிமன்யுவும் , விக்ரம் அபிநந்த னும் நிழலாடத் தொடங்கினர் !

இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் , ஒற்றை அணைப்பு சகோதரர்கள் இழந்த இருபத்தி நான்கு வருடங்களை ஈடுகட்டிக் கொண்டிருந்தது .

இரு வேங்கைகளும் எதிரெதிரே நின்றதை கண்டு பழகியிருக்க , இப்போது ஒன்றாய் ஒற்றுமையாய் நிற்பதைக் கண்ட சீறும் பெண் சிங்கமான நீரஜாவின் விழிகளில் கு ள ம் கட்டிவிட , அணைத்திருந்தவர்கள் பிரிந்து அருகருகே நிற்க , இருவரின் அருகே சென்ற நீரஜா , “ இப்பதான் இதெல்லாம் தோணுச்சா ?” என்று இருவரையும் ஒன்றாய் அணைக்க ,

இரட்டை வேங்கைகள் , “ இப்பதான் உங்களுக்கும் எங்ககிட்ட பேச தோணுச்சா ? எங்களை விட பொண்ணுக மேல தான் பாசம் போல” ஒரே போல இருவரும் கேட்க ,

இருவரையும் விட்டு விலகி நின்றவர் , “ நீங்க எவ்வளவு முக்கியமா இருந்தா உங்க இரண்டு பேருக்குமே அவங்களை கல்யாணம் பண்ணி தந்திருப்பேன் ” என்றாரே பார்க்கலாம். அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர் .

பேரன்களின் அருகே வந்த இமையரசியும் , “ இப்படியே இருங்கய்யா ” என்று குரல் கமற கூற , அவரின் கரத்தை பிடித்தவர்கள் புன்னகைத்து விழி சிமிட்டினர் .

அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க , கௌதமின் விழிகளும் , திலோத்தமையின் கோப விழிகளும் சந்தித்து மீண்டன .

அவளுக்கு அவளுடைய அழைப்பை அவன் இன்று மதியம் ஏற்கவில்லை என்கின்ற கோபம். மேலும் திட்ட வேறு செய்திருந்தான் அல்லவா. அவன் விழிகளாலேயே அவ்வப்போது மன்னிப்பை வேண்ட , பெண்ணவளோ முன்னிருந்த முடிகள் பின்னே துள்ளி விழ கழுத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள் .

‘ இருடி உ ன் னை அப்புறம் பாத்துக்கறேன் ‘ என்று மனதுக்குள் நினைத்தவன் கிளம்ப , இமையரசி , “ நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற கௌதம் … உங்க நாலு பேர்ல மூணு பேருக்குமே கல்யாணம் ஆகிடுச்சு … இனி நீதான் பண்ணனும்” என்று நடந்து கொண்டிருப்பது அறியாமல் , ‘ ஹெஹெஹெ ‘ என்று வேறு சிரிக்க , திலோத்தமைக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ கூடிய சீக்கிரம்… உங்ககிட்ட சொல்லாமையா ?” என்று கேட்டு வைத்து கிளம்ப , திலோத்தமைக்கு சொல்லத் தேவையில்லை. கனவு வானில் மிதக்கத் தொடங்கிவிட்டாள் .

அன்றிரவு அவரவர் அறைக்குள் செல்ல , திலோவும் மித்துவும் இன்று நடந்தது அனைத்தையும் டிஸ்கஸ் செய்து கொண்டிருக்க , ‘ இருந்தாலும் விக்ரம் மாமா ஜெட் வேகம்டி ‘ என்று மித்து சிரிக்கும் எமோஜியுடன் மெசேஜ் செய்ய , ‘ ஆமா ஆமா ‘ என்று திலோ அனுப்ப , இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர் .

அறைக்குள் நுழைந்ததும் கணவனை பின்னிருந்து அணைத்த நறுமுகை அவனின் முதுகில் முத்தம் பதித்து , “ லவ் யூஉஉ !” என்று கிறங்க ,

தலை குனிந்து தன் மார்பில் பதிந்திருந்த தன்னவளின் கரத்தை பற்றி மென்மையாய் ட்ரிம் செய்திருந்த மீசை குத்த முத்தமிட்டவன் , “ லவ் யூ டூ டி சில்க் ” என்று கேலி செய்து முதுகில் கடி வாங்கினான்.

“ ஆஹ் ! வலிக்குதுடி ” என்று கூறியவனின் முன் வந்து அணைத்தவள் ,

“ எனக்கு பிடிச்ச இரண்டு பேரும் பேசிட்டீங்க … எனக்கு இதை விட என்ன வேணும் சொல்லுங்க … அதுவும் நீங்க பேசுவீங்கனு எக்ஸ்பக்ட் பண்ணவே இல்ல நான்” என்றவள் கணவனை அண்ணார்ந்து பார்த்து பேசிக் கொண்டே அவனின் நெஞ்சில் இதழ் பதிக்க , தன்னவளின் தலையை மேலும் தன்னோடு அழுத்திக் கொண்டான் அவளின் விக்ரம் .

கணவனிடம் இருந்து விலகியவள் , அவன் முன்னேயே உடையை மாற்றத் துவங்க , கட்டிலில் போய் தலைக்கு கை கொடுத்து தன்னவளை இன்ச் விடாது பார்த்துக் கொண்டிருந்த விக்ரமை புன்னகையோடு பார்த்தவள் , உடைகளை கழற்றியபடியே , “ ஸார் இந்த மாதிரி எல்லாம் சும்மா இருக்க மாட்டிங்களே … இந்நேரம் பக்கத்துல வந்திருக்கணுமே …” என்று கணவனை கேலி செய்ய ,

“ நாளைக்கு டாக்டர் கிட்ட செக்கப் போயிட்டு வந்து… நீயும் பேபியும் எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்ட அப்புறம் தான் எல்லாமே” என்றவனின் அருகே இரவு உடையுடன் நான்கு கால்களில் தவழ்ந்து வந்து படுத்தவளை ,

“ ஏய் இப்படி எல்லாம் வர்றாத நறு …” என்று வயிற்றை பிடித்தவனை முறைத்தாள் நறுமுகை .

அவனை முறைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தவளை பி ன்னி ருந்து அணைத்தவன் , “ என்னடி ?” என்று கேட்டபடி கன்னத்தில் இதழ் பதிக்க , அவன் முத்தம் கொடுத்த இடத்தை துடைத்தவள் , “ பேசாதீங்க … ஹும்” என்று தலையை வெட்டினாள் .

“ ஏய் என்னடி ?” மீண்டும் கேட்டவனிடம் ,

“ குழந்தை வந்தோன அப்படியே மொத்த அக்கறையும் அங்க போகுது ?” என்று கேட்டவ ளை தன்னை நோக்கி திருப்பியவன் ,

“ இரண்டு பேருமே எனக்கு முக்கியம் தான்… பிறக்க போறது பொண்ணா இருந்தா என்கிட்ட க்ளோஸா இருக்கும்… பையனா இருந்தா நினைச்சு பாரு… நீ என்னையவே மறந்திடுவடி … ஆனா , எனக்கு உன் மேல இருக்க லவ் , லஸ்ட் , கேர் எல்லாமே அறுபது வயசானா கூட அப்படியே தான் இருக்கும்… கம்மி ஆகாது…” என்று தன்னவளின் கன்னத்தை பற்றியபடி பேசியவனின் கன்னத்தை கடித்து முத்தம் பதித்தவள் , அவனின் மார்பில் தலை சாய்க்க , வஞ்சியவளின் தலையில் முத்தம் பதித்தவன் , ஏதோ சாதித்தது போன்றதொரு உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தான் .

இங்கே இருவர் பிணைந்திருக்க , நீரஜாவின் அறையில் அமர்ந்திருந்தாள் உத்ரா .

நீண்ட நேரமாக அனைவரும் கீழே இருந்தபோது பெரிய மகளையே கைகளில் தாங்கிக் கொண்டிருந்த நீரஜாவிற்கு , அப்போது தான் உத்ராவின் ஞாபகம் உதிக்க நிமிர்ந்து பார்த்தார்.

அபிமன்யுவின் பார்வையும் , தந்தையின் பார்வையும் மகளை குற்றம் சாட்டியதை பார்த்தே அறிந்தவர் , மகளின் வாடலையும் , மருகலையும் எண்ணி இன்று மகளிடம் பேசிவிட எண்ணினார் .

அதற்கு தான் அவளை அறைக்கு அழைத்திருந்தார் . ஏற்கனவே கணவனிடம் நீரஜா கூறியிருந்ததால் , மகள் வந்ததும் சிறிது நேரம் பேசிய விஜய் , பால்கனியில் சென்று புத்தகத்துடன் அமர்ந்துவிட்டார் .

முகத்தை கழுவிக்கொண்டு நைட்டிக்கு மாறி வெளியே வந்த நீரஜா , மகளின் எதிரே படுக்கையில் அமர்ந்து கொண்டு , “ உத்ரா ” என்றழைக்க , “ ம்மா ” என்றாள் சின்னவள்.

மகளின் கரத்தை பற்றியவர் , “ நீயும் அபியும் உங்க லைஃப் ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா ?” என்று நேரடியாகவே கேட்க , அன்னையின் விழிகளை சந்திக்க இயலாது தவித்தவள் , ‘ இல்லை ‘ என்பது போல தலையாட்டினாள்.

“ என்னாச்சு உத்ரா ? எனக்கு தெரிஞ்சு அபிக்கு பிரச்சனை இருக்க மாதிரி தெரியல ” என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் , உதடுகள் நடுங்க , “ என்கிட்ட தான்மா பிரச்சனை” என்றாள்.

மகளின் பதிலில் ஒரு கணம் யோசித்த நீரஜா , “ நீதான் உன் மனசை மாத்திக்கணும் உத்ரா … இப்ப நறு ப்ரெக்னென்ட் ஆனதுனால நான் இதெல்லாம் சொல்லல … குழந்தை எப்ப பெத்துக்கணும் அப்படிங்கிறதை நீங்கதான் முடிவு பண்ணனும்… ஆனா , நீங்க இரண்டு பேரும் நார்மலா பேசி கூட நான் இத்தனை நாள் பாக்கல …” என்ற அன்னையின் அருகே வந்து அமர்ந்தவள் , அவரின் தோளில் சாய்ந்தாள் .

மகளின் கன்னத்தை தட்டிக் கொடுத்தவர் , “ பாப்பு !” என்றழைக்க , “ ம்ம் ” என்றவளின் குரல் கரகரத்தது .

“ ச்சு … அழுத அடி பிச்சிடுவேன் … இந்த அழுகற பழக்கத்தை உனக்கு யாரு கத்துக் கொடுத்தது ? ” என்று அதட்ட ,

“ உங்களுக்கென்ன அப்பாவை கல்யாணம் பண்ணிட்டீங்க … லவ் பண்ண பையனையே கல்யாணம் பண்ணி ஜாலியா இருக்கீங்க ” என்று வள்ளென்று எரிந்து விழ , நீரஜாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ சரி தான்” என்று சிரித்தவர் , “ நீங்க எப்படி அம்மணி… பிடிக்காத பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா ? அபி வேற பொண்ணை கல்யாணம் பண்றேன்னு சொன்னப்ப … மித்து மேல எடுத்து பொருளை வீசுனது எல்லாம் மறந்திடுச்சா ?” என்று கிண்டல் புரிய ,

“ ம்கூம் ” என்று சிணுங்கியவள் மேலும் அன்னையின் தோளில் புதைந்தாள் .

“ அபி மேல உனக்கு என்ன கோபம் உத்ரா ? ” என்று வினவ , யாரிடமும் இதை சொல்ல முனையாதவள் அன்னையிடம் மட்டும் சொல்லிவிடவா போகிறாள் ?

மகள் அமைதியாக இருப்பதை கண்டவர் , “ உன்கிட்ட தான் கேக்கறேன் ” என்று இலேசாக அதட்ட ,

“ அதெல்லாம் எதுக்கு ம்மா … முடிஞ்சு போனதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க ? ” என்று அன்னையின் தோளில் இருந்து எழுந்தவள் , அன்னையின் முகத்தை பார்த்து சற்று கோபத்துடன் கேட்டு வைக்க ,

விழிகளாலேயே புன்னகைத்த நீரஜா , “ புருஷனை என்கிட்ட கூட விட்டுத்தர முடியல … இதுல உனக்கு கோபமா ?” என்று கேட்க , சற்று நாணமும் அதைவிட அதிக கோபமும் இணைந்து முகம் சிவக்க , அன்னையிடம் அதை மறைக்க முயன்றவள் எங்கோ பார்த்தாள்.

மகளின் தாடையை பிடித்து திருப்பிய நீரஜா , “ உண்மையா அபி மேல கோபமா ?” என்று வினவ ,

“ அவர் உங்களுக்காக பண்ணது எல்லாம் ஓகே… ஆனா , என்னை அதுல கஷ்டப்படுத்தி இருக்க கூடாது… என்கிட்ட உண்மையை சொல்லி கேட்டிருந்தா நான் கண்டிப்பா சைன் பண்ணியிருப்பேன் ம்மா … ஆனா அவரு ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டாரு அன்னைக்கு… அதுக்கு முன்னாடி இருந்த நாலு நாளும் ஒருத்தரை பாத்துட்டு , மறுபடியும் அவரு அப்படியே மாறுனப்ப எப்படி ஃபீல் ஆச்சு தெரியுமா ?

இவரு உண்மையாவே நம்மள லவ் பண்ணா ரா … இல்ல சைன் வாங்கிறதுக்காக தான் கூட்டிட்டு வந்தா ரா … எவ்வளவு நம்புனேன் தெரியுமா அவரை… ம்மா நீங்க எப்படி எடுத்துப்பீங்க தெரியல … யாருக்கும் சொல்லாததை சொல்றேன் … உங்ககிட்ட சொல்ல ஒரு மாதிரி இருந்தாலும் , என்னால உங்ககிட்ட மட்டும் தான் இதை சொல்லவும் முடியும்” என்றவள் சிறு தயக்கத்துடன் ,

“ நாங்க நாலு நாள் ஒரு பெட்ல தான் தூங்குனோம் … என்கிட்ட லிமிட் க்ராஸ் பண்ணவே இல்ல அவரு … நிறைய அவர்கிட்ட பேசுனேன் … இன்பாக்ட் அவரு அவ்வளவு பேசுவாரான்னு அந்த டேஸ்ல தான் தெரிஞ்சுது ம்மா … ரொம்ப நல்லா தான் பாத்துக்கிட்டாரு … ஆனா , கடைசி நாள் தான்…” என்றவளுக்கு விழிகள் கலங்க , மகளின் கண்ணீரை கண்ட நீரஜா மக ளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள ,

“ என்னால அதை மறக்கவே முடியல ம்மா … நானே நினைச்சாலும் அதுதான் ஞாபகம் வருது … ஆனா அவரை வெறுக்கவும் முடியல , ஏத்துக்கவும் முடியல ” என்றவளின் தலையை தட்டிக் கொடுத்த நீரஜா தாயாய் மகளின் நிலையை நன்கு உணர்ந்தார்.

“ பாப்பு !” என்றவர் , “ அபிகிட்ட மனசு விட்டு பேசு. நீ எப்படி ஃபீல் பண்றனு சொல்லு… என்கிட்ட சொன்னதை அப்படியே சொல்லு… நீ நினைக்கிற மாதிரி இல்ல … அவன் நான் பாக்க வளந்த பையன்… ம்கூம் … நான் வளத்த பையன்… அவனோட மனசு ஒரு சிலருக்கு தான் புரியும்… இப்ப நடந்த பிரச்சனைல கூட நறுமுகைக்காக அபி அலைஞ்சான்னு சொன்னாலும் , அதைவிட முக்கிய காரணம் விக்ரமா தான் இருக்கும்” என்று மருமகனை சரியாக கணித்துக் கூறியவர் ,

“ விக்ரமா ஹக் பண்ணோன அவனும் பண்ணா ன் னா அபி மனசுல இது ரொம்ப நாளா ஓடிட்டி இருந்திருக்குன்னு தான் அர்த்தம்… இல்லைனா அபி சத்தியமா ரெஸ்பான்ட் பண்ணியிருக்க மாட்டான் ” என்றவரை உத்ரா பார்த்துக் கொண்டே இருக்க , புன்னகைத்தபடி மகளின் தோளைத் தொட்டவர் ,

“ அபி நீ சொன் னா அன்டர்ஸ்டான்ட் பண்ற பையன்” என்றிட , சரியென்று தலையாட்டியவள் , தனது அறைக்கு எழுந்து செல்ல , மகள் சென்றவுடன் உள்ளே வந்தார் விஜய் .

“ என்ன சொன்னா ?” என்று கேட்க , விஜய்யை திரும்பி பார்த்து புன்னகைத்தவர் ,

“ எல்லாம் சரியாகும் ” என்றவர் படுக்கையில் சோர்வுடன் படுக்க , மனையாளின் பாதங்களை எடுத்து தன் மீது வைத்து பிடித்துவிட்டவர் , “ நீயும் மனசை போட்டு அலட்டிக்காத அம்மாடி” என்று ஆறுதலாய் கூற , கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருக்கும் கணவரையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவின் விழிகள் தூக்கத்தில் சில நிமிடங்களிலேயே சொக்கி சொருக , நீரஜா உறங்கிய பின் போர்வையால் அவரை மூடிய விஜய் மனையாளை அணைத்தபடியே அன்றிரவு தூங்க , அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்த உத்ராவிற்கு கணவன் அங்கிருக்கும் சுடவே தெரியவில்லை.

‘ இவரு வேற … ஒரு வீடு சைஸுக்கு ரூமை வச்சிட்டு எப்ப எங்க இருக்காருன்னே தெரியறது இல்ல ‘ என்று தேடியவள் , பால்கனி பக்கம் சென்று பார்த்துவிட்டு , மீண்டும் வெற்று சுவர் இருந்த பக்கம் வந்து அபிமன்யு அவளுக்கும் சேர்த்து செய்திருந்த ஏற்பாட்டினை உபயோகித்தாள்.

உத்ரா தனது கரத்தை சுவற்றில் ஒரு இடத்தில் வைக்க , சுவரைப் போலவே இருந்த கதவுகள் இரு பக்கங்களிலும் இராஜரீகமான திறந்து காரிகையவளை வரவேற்க , இரண்டு பக்கங்களிலும் கண்ணாடிக் கதவுகளால் மூடியிருந்த இரண்டு அறைகள் இருக்க , நடுவே சென்ற பாதையில் சிறிது அடிகள் வைத்தவளுக்கு , ட்ரெஸ்ஸிங் ரூமில் லைட் எரிவது தெரிந்தது.

‘ ட்ரெஸ் மாத்திட்டு இருக்காரோ ‘ என்று யோசித்தவள் , முதலில் அங்கிருந்த தனது அறைக்குள் புகுந்து குளித்து முடித்து , இரவு உடைக்கு மாறியவள் வெளியே வர , ட்ரெஸ்ஸிங் அறையில் இருந்து கசிந்து கொண்டிருந்த மெல்லிய மஞ்சள் வெளிச்சம் இல்லாது இருக்க , ஒவ்வொரு அறையாக பார்க்கத் துவங்கினாள் .

திருமணம் முடிந்து சென்னை வந்ததில் இருந்து , உத்ரா தன்னுடன் இருக்க விருப்பப்பட மாட்டாள் என்று நன்கு உணர்ந்திருந்த அபிமன்யு , அவளுக்காகவே உள்ளே தனக்கென இருந்த மற்றொரு படுக்கை அறையை தயார் செய்திருந்தான் .

முழு கருப்பு நிறத்தை சுமந்திருந்த அபிமன்யுவின் பகட்டான அறைகளில் , முதல் முறை பீச் நிறம் பூசப்பட , அங்கு சூழ்ந்திருந்த விழிகளுக்கு தெரிந்திடாத ஆட்டம்ஸிற்கோ மனம் கொள்ளா துணை தான் அது.

அவளுக்கு பிடித்த நிறத்தில் உள்ளுக்குள் இருந்த தனக்கென்று இருந்த மற்றொரு படுக்கை அறையை மாற்றிக் கொடுத்தவன் , அன்றே அவளிடம் கூறி இருந்தான்.

“ என் பொறுமைக்கும் அளவு இருக்கு உத்ரா … இன்பாக்ட் நான் இந்த மாதிரி எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணதே கிடையாது…” என்று கூறி அன்று அவளின் அறையை விட்டு சென்றிருக்க , அன்று இந்த அறைக்குள் புகுந்திருந்தாள் அபிமன்யுவின் மனைவி.

அன்னை அல்லது தந்தையுடன் மருத்துவமனை செல்வது , வருவது , உடை மாற்றி கீழே வந்து இமையரசியுடன் அல்லது திலோத்தமையுடன் இரவு பதினொரு மணி வரை இருப்பது , வீட்டிற்கு அழைத்து கதைப்பது என்றே நேரத்தை கழிப்பவள் , அதன் பிறகு வந்து அறையை தாழிட்டுவிட்டு தூங்கிவிடுவாள் .

இதுதான் அவளின் தினசரி வாழ்க்கையாக இருந்தது கடந்த ஒரு மாதமாக. அபிமன்யு ஏதாவது கேட்டால் பதில் கூறுவாள் . அதிகமாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டாள் . அபிமன்யு சீண்ட முயன்றால் கூட கடந்து சென்று விடுவாள்.

அப்படி இருந்தவள் இத்தனை நாட்களில் முதல் முறை அபிமன்யுவை தேடினாள். அன்னையின் வார்த்தைகள் என்பதை விட , அன்னையின் வார்த்தைகளில் இருந்த உண்மைகளுக்காக .

தனது அறையில் இருந்து வெளியே வந்தவள் , அதற்கு எதிரில் இருந்த கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள்.

அபிமன்யுவின் அலுவலக அறை!

அங்கில்லை அவளின் கணவன்.

சிறிது முன்னே சென்றவள் அங்கிருந்த கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு உள்ளே பார்த்தாள்.

அபிமன்யுவின் தனிமை அறை!

உள்நாட்டு , வெளிநாட்டு புத்தகங்கள் , மியூஸிக் சிஸ்டம் என்று அடங்கிய இதம் குறையாத அறை!

அங்கும் அவன் இல்லை!

அடுத்து அதற்கு எதிரில் இருந்த கண்ணாடிக் கதவை வெறித்தாள் உத்ரா .

அபிமன்யுவின் மினி பார் அது!

‘ இங்கே இருக்கிறாரோ ‘ என்று யோசித்தவளுக்கு மனம் பிசைய , கண்ணாடி கதவை திறந்தவள் , உள்ளே எட்டிப் பார்க்க , மிதமான வெளிநாட்டு பாடல் ஓடிக் கொண்டிருக்க , பொன் நிற டிம் லைட் கசிந்து கொண்டிருக்க , அங்கிருந்த சூழலை உத்ராவிற்கு உணர்த்த , மெதுவே உள்ளே காலை வைத்தாள் அந்த பூம்பாவை .

உள்ளே மெய்யாலுமே மினி பார் தான்!

இப்படி ஒரு அறை இருப்பது சொல்லப் போனால் யாருக்கும் தெரியாது கூட வீட்டில்!

உத்ராவை தவிர!

உள்ளே என்ன அறை என்று அபிமன்யு வந்த தினம் கூறியிருந்தாலும் , இத்த னை நாட்களில் அவன் இதை உபயோகித்து அவள் கண்டதே இல்லை.

சினிமாக்களில் வருவது போல முன்னால் கருப்பு கிரானைட்டினால் செய்யப்பட்ட நீள் மேஜை இருக்க , அதற்கு முன்னே நான்கு பார் ஸ்டூல் தரையோடு பொருத்தப்பட்டு வைத்திருக்க , அட்டகாசமாக அதுவும் கிரானைட் .

அதில் ஒன்றின் மேல் அபிமன்யு அமர்ந்திருக்க , மேஜையை தாண்டி நிறைய நிறைய பாட்டில்கள் பேக் பாரில் ( Back bar) அடுக்கி வைக்கப்பட்டு இருக்க , அதில் ப்ளூவும் இளம் மஞ்சளுமாக வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது .

தரை முழுதும் மரத்தாலான டிசைனால் செய்யப்பட்டிருக்க , அதில் பாதங்கள் அழுந்த நின்றிருந்த உத்ராவிற்கு ஏசியின் குளிர் அதிகமாகத் தெரிய , மெதுவே நடந்து அபிமன்யுவின் அருகே சென்றவளுக்கு , அந்த உடலை நடுங்க வைக்கும் ஏசியின் கடுங்குளிரிலும் அபிமன்யு வியர்த்து அமர்ந்திருப்பது புரிந்தது.

‘ இப்படி ஸ்வெட் ஆகற அளவுக்கு குடிச்சிருக்காரா ?’ என்று நினைத்தவள் உள்ளுக்குள் கலங்கிப் போனவளாய் , தன்னுடைய அனைத்து கோபங்களையும் விடுத்து அபிமன்யுவின் அருகிலிருந்த பார் ஸ்டூலில் சென்று அமர்ந்தவள் , கணவனையே பார்த்திருந்த தளிர் மேனியவளின் பதட்டம் அதிகரிக்க , கணவனின் கரத்தை பற்றினாள் அபிமன்யுவின் அருமை மனைவி.

நீள் கிரானைட் மேஜையில் கரம் ஊன்றி அமர்ந்திருந்தவன் , ஒரு கரத்தில் கண்ணாடி குவளையை அழுந்தப் பிடித்திருக்க , மறு கரத்தை நெற்றிக்கு கொடுத்து விழிகளை மூடி அமர்ந்திருக்க , அசையாது அமர்ந்திருந்தாலும் உத்ரா கதவைத் திறந்ததில் இருந்து , உள்ளே வந்து அருகில் அமர்ந்தது வரை உணர்ந்தவன் , அவள் தன் கரம் பற்றி கூட அவளை என்னவென்றும் பா ர்க்கவில்லை .

அதீத காதல் அதீத கோபத்தை விளைவித்து இருந்தது!