LNCrawler

ஆட்டம்-48

ஆட்டம் — www.smtamilnovels.com · All chapters

ஆட்டம்-48

ஆட்டம்-48

கௌதம்-திலோ த் தமையின் நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது . வீட்டில் கூறிய ஒரு வாரத்தில் நிச்சயத்தை வைத்துவிட்டனர் . ஆனால் , சிறியவளின் படிப்பு முடிந்தபின் தான் திருமணம் என்று கௌதம் உறுதியாக இருக்க , அது மட்டும் அடுத்த வருடம் என்ற ரீதியில் இருந்தது.

மருத்துவமனையில் பேஷன்ட்டை பார்த்துக் கொண்டிருந்த உத்ராவிற்கு எரிச்சல் தான் மண்டியிருந்தது . முகத்தின் மேல் மாஸ்க் அணிந்து ஸ்கேல்லிங் ( scaling) செய்து கொண்டிருந்தாள் .

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவள் , “ ஸார்! பல் விளக்கிட்டு வந்தீங்களா இல்லியா ?” என்று தாள முடியாத எரிச்சலுடன் கேட்டு வைக்க , பல்லை காட்டிய அந்த பேஷன்ட் ,

“ டென்டிஸ்ட் கிட்ட தானே வர்றோம்னு பண்ணல மேடம் ” என்று கூறியவுடன் , ஏற்கன வே கணவனின் மேல் கொண்ட ஆத்திரத்தில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு வந்ததே ஒரு கொலை வெறி.

அவரை முறைத்து பார்த்தவள் , “ அதுக்காக நாங்களே பல்லு விலக்கிவிடுவோம் … நீங்க இப்படி இருக்கனால தான் இப்படி பல்லு கறை பிடிச்சு இருக்கு” என்று சற்று கடுமையாகவே திட்டியவளின் குரலில் அவர் வாய் பிளந்து சற்று எழ ,

“ படுங்க … அப்பறம் எப்படி க்ளீன் பண்றது ” என்று சிம்பியவள் , பல்லை சுத்தம் செய்தே அனுப்பிவிட்டாள்.

( இந்த சீன் எதுக்குன்னா மக்களே … எனக்கு இது நடந்திருக்கு … யக்க்க்க் )

“ அடுத்த ஓபி இருக்கா ?” என்று உத்ரா எழுந்தபடி செவிலியரிடம் வினவ ,

“ இல்ல மேடம் … இனி லன்ஞ் அப்புறம் தான்” என்றவுடன் கைகளை க் கழுவிக் கொண்டு வந்த உத்ராவின் முன் நின்றது என்னமோ நீரஜா தான்.

கைகளை சானிடைஸ் செய்தபடியே , “ என்ன ம்மா ?” அவரின் மகள் வினவ , நீரஜா செவிலியரை பார்க்க , புரிந்து கொண்ட பெண்ணோ வெளியேறிவிட்டாள் .

மகளுக்கு எதிரே அமர்ந்த நீரஜா , “ ஏன் இப்ப எல்லாம் டென்ஷன் ஆகற உத்ரா ?” என்று அக்கறையுடன் வினவ ,

“ பின்ன டாக்டர்கிட்ட வர்றாங்கனு பல்லு கூட விளக்காம வந்தா டென்ஷன் ஆகாதா … எவ்வளவு பேட் ஆடர் ( Bad odour) தெரியுமா… நிக்கவே முடியல என்னால ” என்று எரிச்சலுடன் பேசியவ ள் கரத்தின் மேல் கரம் வைத்தவர் , பொறுமையாக ,

“ சிலர் அப்படி தான் இருப்பாங்கடாமா … பொறுமையா சொல்லு… இப்படி புருஷன் மேல இருக்க கோவத்தை மூட்டை கட்டிட்டு வந்து வர்றவன் மேல காட்டுனா , இந்த ஹாஸ்பிடல் சேர்மேனான உன் புருஷனுக்கும் , உன் விக்ரம் மாமாக்கும் தான் லாஸ் ” என்றிட , அன்னையை முறைத்தாள் நீரஜாவின் கோபமகள் .

“ ஆனா உங்க மூத்த மருமகன் திமிரும் , அழுத்தமும் எல்லாம் இந்த உலகத்துல யார்கிட்டையும் இருக்காது தெரியுமா ?” என்றவள் ,

“ அதுக்குன்னு உங்க சின்ன மருமகன் சாதாரணம் கிடையாது… இது இந்த ரகம்னா உங்க சின்ன மருமகன் சொல்லாமையே தான் நினைக்கிறதை அடுத்தவங்களை பார்வையாலேயே செய்ய வைக்கிற ஆளு” கடுப்புடன் பொரிந்தவள் ,

“ எல்லாத்துக்கும் காரணம் நீங்களும் , இந்த தாத்தாவும் தான்… எங்களுக்கு எல்லாம் குழந்தை வந்தா முதல்ல உங்ககிட்ட எல்லாம் விடக்கூடாது… அப்புறம் எங்களை மாதிரி எவ வந்து பாடுபட போறாளோ ” என்றவளின் அலைபேசி அடிக்க , திரையை பார்த்தவள் , “ இவ வேற ” என்று கட் செய்துவிட்டாள்.

மருமகன்களின் புகழை மகள் பாடியதில் சிரித்துக் கொண்டிருந்த நீரஜா , “ யாரு ?” என்று வினவ ,

“ திலோ தான் ம்மா … கௌதம் அண்ணா பிசி ஆகிட்டா எனக்கு இல்லைனா மித்து இல்லைனா நறுக்கு கூப்பிட்டு காதல் வசனம் பேசிட்டு இருப்பா … கடவுளே” என்று நெற்றியில் கை வைக்க , வாய்விட்டுச் சிரித்த நீரஜா ,

“ பொறாமையா உனக்கு உன் புருஷன் பக்கத்துல இல்லைனு ” என்று கேட்ட அன்னையின் கேள்வியில் உத்ராவின் மனம் சுருங்கிப் போனது.

‘ ஆமா பக்கத்துல இருந்துட்டா மட்டும் ’ என்று யோசித்தவள் , அன்னையிடம் பேச்சை மாற்றி , “ பசிக்குது ” என்று கூற , இருவரும் மதிய உணவிற்காக செல்ல , அங்கு ஏற்கனவே மகளுக்காகவும் , மனைவிக்காகவும் காத்திருந்தார் விஜய் .

மூவரும் சாப்பிட அமர , தந்தையும் அன்னையும் ஒற்றுமையாக பேசுவதை க் கண்ட உத்ராவின் இருதயம் கணவனை நினைத்து ஏங்கியது .

அவளுக்கு எதுவும் வேண்டாம். சமுத்திரத்தில் இருந்தபோது தன்னிடம் இயல்பாக பேசியது போன்று பேச மாட்டானா என்ற ஏக்கமே அனுதினமும் துடிக்கும் பெண்ணவளுக்குள் . தன்னவனின் பிடிவாதம் தெரிந்தும் , அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்தும் அவளால் முதல் அடி எடுத்து வைக்க முடியவில்லை என்பதே உண்மை.

ஏன் அவர் விட்டுக்கொடுத்தால் என்ன ?

என்னிடம் கூடவா இறங்க மாட்டார் ?

அப்படி என்ன என்னிடம் கூட கரையாத இரும்பு மனம் ?

மனதால் பல்வேறு கேள்விகளை தன்னவனிடம் கேட்டுக் கொண்டிருந்தவள் , “ அப்பா உங்களுக்கும் அம்மாக்கும் லவ் பண்ணும் போது சண்டையே வந்தது இல்லையா ?” என்று வினவ , நீரஜாவின் விழிகளும் , விஜய்யின் விழிகளும் சந்திந்து மீள ,

“ சொல்லட்டுமா அம்மாடி ? ” என்ற கணவனிடம் நீரஜா மிரட்டலுடன் விழிகளை உருட் டி எச்சரிக்க , அன்னை தந்தையின் பார்வை பரிமாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்த உத்ராவின் செம்பருத்தி அதரங்கள் ரசனையாய் புன்னகைத்தன .

“ அப்பா நீங்க சொல்லுங்க ” என்று கெஞ்சலும் சிணுங்கலுமாக கேட்ட மகளின் செய்கையில் குரலை செறுமிய விஜய் , மனைவியை பார்வையாலேயே கொஞ்சிவிட்டு மகளிடம் கூறத் தயாரானார் .

“ உங்க அம்மாவை நீ சா தா ரணமா நினைக்காத உத்ராமா ?” என்று விஜய் துவங்க ,

“ தெரியும் தெரியும் ” என்ற உத்ரா அன்னையை கேலியாக ஓரவிழி கொண்டு பார்க்க , “ என்னடி கொழுப்பா ?” என்று மகளை அதட்டினார் நீரஜா .

“ இப்ப லவ் எல்லாம் சகஜமான ஒண்ணு ஆகிடுச்சு … அந்த காலத்திலேயே லவ்வை தைரியமா நேருக்கு நேர் சொன்னா … அப்புறம் நான் அக்ஸெப்ட் பண்றதுக்குள்ள மேடம் பண்ண செயல்லாம் இருக்கே …” என்று காதல் கதையை கூறியவர் ,

“ சுருக்கமா சொன்னா உங்க அம்மா லேடி கெட்டப்ல இருக்க அபிமன்யு , விக்ரம் மிக்ஸ்ட் ( mixed)…” என்று கூறி சிரித்தவரின் கரத்தில் அடிபோட்ட நீரஜா , “ ஆமா இவரு ஒண்ணும் தெரியாத ஆள் பாரு” என்றவரால் மகளின் வதனத்தை எதிர்கொள்ள முடியவில்லை.

பழையதை எல்லாம் நினைத்துப் பார்க்க , தன்னை நினைத்து அவருக்கே நாணம் எட்டிப் பார்த்துது .

“ அப்புறம் அப்பப்ப சண்டை வரும்… என்கிட்ட வந்து ரஞ்சனி தவி ர யாராவது பேசுனா அவ்வளவு தான்… பார்வையாலேயே பஸ்பம் ஆக்கிடுவாங்க மேடம் … ஒரு தடவை என்கிட்ட வந்து ஒரு ஜூனியர் பொண்ணு டவுட் கேக்கறேன்னு ப்ளர்ட் பண்ணிட்டு போனா பாவம்… அந்த நாள் நைட் ஹாஸ்டல்ல அவங்க மொத்த பேட்ச்சுக்கும் ராக்கிங் வச்சு , நைட் மூணு மணி வரைக்கும் இல்லாத கலாட்டா நடத்தியிருக்காங்க மேடம் …

அப்புறம் ஒரு தடவை தெரியாம உங்கம்மாகிட்ட விளையாட வர்தன் ஒரு கன்னடா பட நடிகையோட ஃபோட்டோவை என் பர்ஸ்ல வச்சுட்டான் … உங்கம்மாகிட்ட போட்டும் கொடுத்திட்டான் … அன்னைக்கு ஒரு மினி ருத்ரதாண்டவம் ஆடுனா பாரு உங்கம்மா… கடவுளே… கோபப்பட்டு , அழுது , என்னை அடிச்சு , கடைசில ரஞ்சனி வந்து சொன்னவுடனே வந்துச்சு பாரு ஒரு கொலை வெறி இவளுக்கு… விட்டா வர்தனை அன்னைக்கே கடிச்சு குதறியிருப்பா … நானும் ரஞ்சனியும் கன்சோல் பண்றதுக்குள்ள அன்னைக்கு படாதபாடு … வர்தனை உங்க தாத்தா பேரை வச்சு மிரட்டி… பாவம்!” என்று நண்பனுக்காக பரிதாபம் கொண்ட கணவனை முறைத்த நீரஜா ,

“ எது மாமா பாவமா ?” என்று முறைக்க , “ இல்ல அம்மாடி , நீதான் பாவம்” என்று தாடையை பிடித்து கொஞ்சியவரை முறைத்தார் நீரஜா .

“ பொண்ணை பக்கத்துல வச்சுட்டு ” வெட்கமும் கோபமு மாக கடைசி பிடியை சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவ செல்லும் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்த விஜய் , மகளை மென்னகையுடன் பார்த்தார்.

“ ஆனா உங்க அம்மா அளவுக்கு என்னால கூட அவளை லவ் பண்ண முடியாது… இவ்வளவு பிடிவாதமா இருக்கா இல்ல … நான்னு வரும்போது எவ்வளவு அட்ஜஸ்ட்பிள் தெரியுமா… இந்த மாதிரி வாழ்க்கைல ஒரு பொண் ண அடைய ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் … இரண்டு பேர்ல ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணி போறது தான் வாழ்க்கை உத்ரா …

அங்க வீட்டுக்கு முதல் முறை வந்தப்ப என்னால மாமனார் வீட்டுல இருக்க முடியாதுனு தோணுச்சு … அதாவது எல்லா ஆம்பிளைக உள்ளேயும் இருக்க திமிர் கொஞ்சம் எட்டி பாத்துச்சு … நான் சொல்லி இருந்தா உங்கம்மா உடனே வெளியே என்கூட வந்திருப்பா … ஆனா இத்தனை வருஷம் தனியா இருந்தவ எப்படி தனியா இருப்பா … அவ எனக்காக காத்திருந்த இத்தனை வருஷத்துக்காக நான் இதுகூட பண்ணலைனா எப்படி சொல்லு… இது உன்னோட லைஃபுக்கு கூட நீ ஏத்துக்கலாம் ” என்று அறிவுரை போன்று கூறிவிட்டு எழுந்து செல்ல , சற்று விநாடிக்கு முன் காதலோடு கூறியவரின் காதல் வழியும் விழிகளை பார்க்கவே சிறியவளின் விழிகள் ஆசையில் நனைந்தது .

‘ எத்தனை காதல்! எத்தனை அன்பு! ’ என நினைத்தவளால் தன் மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இப்போதே தன்னவனிடம் ஓடிச் சென்று , ‘ ஏன் என்னை தவிர்க்கிறாய் ?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது.

யோசித்துக் கொண்டே கைகளை கழுவியவளுக்கு அழைப்பு வந்தது. மித்ராவிடம் இருந்து.

“ சொல்லு மித்து ” என்று பெண்ணவள் எடுக்க ,

“ நாங்க இண்டியால இருக்கோம்” என்று தங்கை கூறியது தான் தாமதம் , ஃபோனை காதில இருந்து எடுத்தவள் தங்கை அழைத்திருப்பது இந்திய எண் என்று தெரிந்த பிறகு , “ வர முடியாதுனு தானடி சொன்னீங்க ” என்று கோபமும் சிரிப்புமாக கேட்டாள்.

“ சும்மாடி … உனக்கு சர்ப்ரைஸ் தர்ற தான்… அதுவும் இல்லாம என்னால எப்படி என் மாம்ஸ் இல்லாம இருக்க முடியும் சொல்லு” என்று கூற , ஃபோனிலேயே அனல் பறக்க எரிச்சல் அடைந்தவள் ,

“ வந்து இருக்குடி உனக்கு” என்று வைத்தாள். ரஞ்சனியும் , விஜய்யும் கூட வந்திருந்தனர் .

அன்று மாலை நடன பள்ளிக்கு அழைத்தவள் , இன்று தான் வர இயலாது என்று கூறிவிட்டு விரைவாகவே வீட்டிற்குச் சென்றாள். அனைவரிடமும் பேசி சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு அவ்வப்போது கணவனின் நிழல் மனதினுள் தோன்ற , அவ்வப்போது முகம் மாறி மீண்டும் பெண்களுடன் பேச்சில் லயித்துக் கொண்டிருந்தது .

பேத்தியின் முக மாறுதலைக் கண்ட இமையரசி , அப்போது வீட்டினுள் நுழைந்த விக்ரமிடம் , “ அபி எப்ப விக்ரம் வர்றான் ? ” என்று கேட்க , உத்ராவை ஒரு முறை பார்த்த விக்ரம் , “ இரண்டு நாள்ல பாட்டி” என்றுவிட்டு மனையாளின் அருகே அமர்ந்தான்.

ஏழாவது மாதத்தை நறுமுகை அடைந்திருக்க , அடுத்த வாரம் வளைகாப்பு வைபவம் நடக்க ஏற்பாடுகள் நடந் து கொண்டிருந்தது . சிவப்பு நிற நைட்டியை அணிந்திருந்த நறுமுகையின் வயிறு , உருண்டை பந்து போன்று முன்னே வந்திருக்க , வயிற்றின் மீது கை வைத்து அமர்ந்திருந்தவளிடம் விக்ரம் பேசிக் கொண்டிருக்க , நறுமுகையின் வதனத்தில் சிறு சோர்வு.

“ டயர்டா இருக்கா ?” விக்ரம் வினவ ,

“ லைட்டா … சார் தான் அடங்கவே மாட்டிறீங்களே … அப்புறம் எப்படி டயர்ட் ஆகாம இருப்பேன்… இந்த அக்கறைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல … இதே வாய்தான் நேத்து அப்படி பேசி பேசி மயக்குச்சு ” என்று கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பொரிந்தவள் , யாருமறியாது அவனின் உதட்டில் சுண்டியும் விட்டாள்.

உதட்டை தேய்த்தபடியே மனையாளை முறைத்தவன் , “ இவ்வளவு பேசறவ … நேத்து எதுக்குடி ஆ…உ” என்று தொடங்கும் முன் கணவனின் வாயை கரம் கொண்டு பொத்தியவள் , “ என்ன பண்றீங்க ” என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையுடன் வினவ ,

தோளைக் கு லு க்கி மனைவியிடம் இருந்து விலகியவன் , “ உண்மையை சொல்லணும்ல ” என்றிட , ‘ ச்சை … விவஸ்தை இல்லாத மனுஷன் ’ என்று உள்ளுக்குள் அடித்துக் கொண்டவள் , கணவனின் தோளில் சாயவும் தவறவில்லை.

மனையாளின் தோள் சுற்றி கரம் போட்ட விக்ரம் , தன்னவளின் வயிற்றின் மீது கரம் வைத்து மெதுவாய் வருடிக் கொடுக்க , தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்ததும் உள்ளே இருந்தவன் , தந்தையின் கரம் மேல் தனது காலால் ஹைபை கொடுக்க , விலுக்கென விழித்தாள் தன்னவனின் குட்டி வேங்கையை சுமந்து கொண்டிருக்கும் அந்த இளம் தாய்.

அவள் பட்டென விழி விரிந்து தன்னவனின் மீது இருந்து எழுந்து , விக்ரமை விவரிக்க முடியாத தாயின் பரவசம் கொண்டு பார்க்க , விக்ரமின் கரங்களும் உணர்ந்தது தனது மகவின் அசைவை !

“ நறு ! அசஞ்சான் தானே ?” என்று வினவ , தன் வயிற்றின் மேலிருந்த கணவனின் கரத்தை மேலும் தன்னோடு அழுத்திப் பிடித்துக் கொண்டவள் , “ ம்ம் ” என்று தா ரா ளமாய் விரிந்து கொண்ட புன்னகையுடன் குனிந்து வயிற்றை பார்த்து , “ அசையறான் ” என்றாள் பூரிப்புடன்.

இவர்களின் சம்பாஷணைகள் கேட்டு அருகில் வந்த மித்ராவும் , திலோவும் விக்ரமின் கரத்தை விலக்கிவிட்டு தங்களின் காதுகளை வைக்க , உள்ளே இருந்தவனுக்கு வந்த கோபத்தை பற்றி சொல்லவா வேண்டும்!

அதுவும் அவனின் தந்தை யார்! பெரிய தந்தை யார்!

வேகமாக அன்னையின் வயிற்றில் இருந்து அத்தைக்கும் , சித்திக்கும் அவன் ஓங்கி ஒன்று கொடுக்க , இருவருக்குமே அவனின் தொடுகையை உணர்ந்த சமயம் , நறுமுகை , “ அம்மா!” என்று அலறிவிட்டாள் .

“ என்னாச்சு ?” விக்ரம் பதற , “ உதைக்கறான் மாமா” என்றவளின் கரம் பற்றிய விக்ரம் பதட்டத்துடன் ,

“ வலிக்குதா ? டாக்டர் கிட்ட போகலாமா ?” என்று வினவ , “ நார்மல் பெயின் தான்” என்றவளின் கரத்தை நீவிக் கொடுத்தவன் , தங்கையையும் , மித்ராவையும் பார்க்க ,

“ க்ளீன் போல்ட் ” என்றனர் இருவரும் கேலியாக.

இருவரையும் முறைத்தவன் , பின் தங்கையிடம் , “ கௌதம் அளவுக்கு இல்ல … கம்மிதான் ” என்று கூறி கேலி செய்தவன் , “ மித்து ஹஸ்பன்ட் எல்லாம் அதைவிட பாவம் தான்… விட்டா வேலையை விட்டுட்டு கூடவே இருக்க சொல்லிடுவே ” என்று கூற , இருவரும் நாணத்தில் ஓடிவிட்டனர் .

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உத்ராவோ விடுவிடுவென்று படிகளில் ஏற , உத்ராவையே பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் , “ ப்ளான் சக்ஸஸ்னு நினைக்கறேன் ” என்று கூற , கணவனும் மனைவியும் ஹைபை அடித்துக் கொள்ள , திலோவும் மித்ராவும் ஹைபை அடித்துக் கொள்ள , மீண்டும் குட்டி வேங்கை அன்னைக்கு இம்முறை வலிக்காதவாறு ஹைபை கொடுத்து , முத்தம் பதித்தான் .

அறைக்குள் வந்தவுடன் தனது அனைத்து வீம்புகளையும் விட்டுக் கொடுத்தவள் , உணர்ச்சிகளிலும் , ஏக்கத்திலும் மூழ்கித் திண்டாடித் தவித்துக் கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி , கணவனின் எண்ணிற்கு அழைத்தாள்.

முழுதாக அழைப்பு செல்ல , அபிமன்யு ஏற்கவில்லை !

மீண்டும் அழைத்தாள்!

பதிலில்லை !

மீண்டும் மீண்டும் அழைத்தாள்!

முழுத் தோல்வி!

கோபத்துடன் அலைபேசியை இறுக பிடித்தவளுக்கு அழுகை எட்டிப் பார்க்க , கண்ணீர் விழிகளில் தேங்கி பளபளக்க , அபிமன்யுவின் படுக்கை அறைக்கு வந்தவள் , தன்னவனின் படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

சுற்றியும் முற்றியும் பார்த்தவளுக்கு அங்கிருந்த அபிமன்யுவின் படங்கள் தெரிய , ‘ இன்னும் கல்யாண ஃபோட்டோ மட்டும் மாட்டவே இல்ல ’ என்று முனுக்கென்று கோபம் வர , கூடவே கண்ணீரும் வந்தது.

கணவனின் படுக்கையை தடவிப் பார்த்தவள் , அப்படியே பூவையாய் படுக்கையில் ஒருக்களித்து சாய , தன்னவனின் மணம் அவளின் மொட்டு நாசியைத் துளைக்க , விழிகளை மூடி ஆழ்ந்து போனவளுக்குத் தெரிந்து போனது இதற்கு மேல் அவளால் தன்னவனிடம் வீராப்பை காட்ட முடியாது என்று.

விழிகளை மூடியிருந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிய , அபிமன்யுவை இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவளின் மனதை போட்டு பிசைந்து எடுத்தது.

செழித்த செந்தாமரையைப் போன்ற அழகிய வதனம் ஏக்கத்திலும் , காதலிலும் , பிரிவிலும் சிவந்து போக , அங்கு சுவற்றில் இருந்த டிஜிட்டல் காலண்டரை பார்த்தாள் அபிமன்யுவின் மனைவி. இன்றுடன் கணவனை அவள் பார்த்து இரு மாதங்கள் ஆகியிருந்தது .

ஆம்! பெண்ணவள் அபிமன்யுவை பார்த்து இரு மாதங்கள் ஆகியிருந்தது !

செல்லும் போது சொல்லிவிட்டுத் தான் சென்றிருந்தான் !

ஆனால் , அவளுக்கு இத்தனை நாள் என்று தெரியாதே!

முதலில் பதினைந்து நாள் என்றுதான் நினைத்திருந்தாள் . முதல் ஒரு மாதம் முதலில் கடந்திருந்தது .

அப்போது தான் பெண்ணவளுக்கு தெரிந்தது. யூ.எஸ்ஸில் ஒரு மாதம் தங்கி வேலையை முடித்துவிட்டு அபிமன்யு அடுத்த ப்ராஜெக்ட்டிற்காக அப்படியே கனடா சென்றுவிட்டான் என்று. விக்ரம் செல்ல வேண்டியது. நறுமுகை இருக்கும் நிலையை கருத்தில் கொண்ட அபிமன்யு , தானே சென்றிருந்தான் .

அதை நினைத்தபடி கோபத்துடன் திரும்பிப் படுத்தவளின் மாங்கல்யம் உடைக்குள் இருந்து வெளியே வந்து விழ , தன் வெண் பிஞ்சு விரல்களால் அதை எடுத்துப் பார்த்தவளின் கரங்கள் காரணமின்றி நடுங்க , தாலியை நெஞ்சோடு இறுகப் பற்றிக் கொண்டவள் , ஒரு முடிவுடன் மறு கரத்தால் அலைபேசியை எடுத்தாள்.

வாட்ஸ் அப்பிற்கு சென்றவள் , தன்னவனின் மேல் கொண்ட காதல் ப ன் மடங்காக , மேனியிலும் உள்ளத்திலும் காதல் மூழ்க , சிறிது சிறிதாக வெடிக்கும் மனதுடன் , வாய்ஸ் ரெக்கார்ட்டை அழுத்தியவள் , “ மாமா!” என்றழைக்கும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்திருந்தது .

“ உங்களை என்னோட லைஃப்ல பர்ஸ்ட் டை ம் பாக்கும்போது , நான் நினைக்கவே இல்ல நீங்க என்னை இப்படி உங்க மேல இவ்வளவு அப்சஸ்ட்் ஆக்கி வச்சிருப்பீங்கனு … அந்த வயசுலையே நீங்க மித்துகிட்ட பேசும்போது எனக்கு பொறாமை வந்துச்சு தெரியுமா… எல்லார்கிட்டையும் பேசுவீங்க சிரிப்பீங்க … ஆனா நான் மட்டும் ஆகாதுல்ல உங்களுக்கு… உங்க முன்னாடி தான் பெரிய பொண்ணு கூட ஆனேன்… அப்ப என் கையை நீங்கதான் புடிச்சு இருந்தீங்க …

பொண்ணுகளுக்கு சின்ன சின்ன விஷயம் கூட மறக்காது … உங்களை விடவே எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு… நறுமுகை சொன்னவுடனே உங்க கை லேசா நடுங்கி என் கையை விட்டுச்சு … என்னால அதை அப்பவே உணர முடிஞ்சுது … அப்ப கூட எல்லாரும் ஏன் அழறேன்னு கேட்டப்ப கூட என்னால உங்களை சொல்ல முடியல … ஆனா யூஎஸ் போன அப்புறம் எத்தனை தடவை இதை நினைச்சு எனக்கு ஷைனஸ் வந்திருக்கு தெரியுமா… அப்ப எல்லாம் அது என்னனு புரியல போல…

மித்து உங்க கூட மெசேஜ் பண்ணும் போதெல்லாம் அவளை அடிச்சிருக்கேன் … வேணும்னே வைபையை ஆஃப் பண்ணி விட்டிருக்கேன் … ஏன் என்கூட பேச மாட்டிறீங்கனு நிறைய டைம் யோசிச்சிருக்கேன் … விக்ரம் மாமா கல்யாணத்துல உங்கள பாக்கணும்னு ரொம்ப ஈகரா இருந்தேன்… ஆனா அம்மா தான் என்னை இண்டியா பக்கமே விடல …

நேர்ல தாத்தா வீட்டுல உங்கள பாத்தது ஞாபகம் இருக்கா … மயங்கியே விழுந்துட்டேன் … ரொம்ப நாளா மனசுல பதிஞ்சிருந்த முகம் பக்கத்துல பாத்த நெர்வஸ்ல தான் விழுந்தேன்… அன்னைக்கு தான் திலோ எல்லாம் சொன்னா … உங்கள லவ் பண்ண சொல்லி ஐடியா தந்ததும் அவதான் … அப்ப பயமா இருந்துச்சு … ஆனா , உங்களை முன்னாடி இருந்தே உள்ளுக்குள்ள பிடிச்சதுனால தான் நான் அன்னைக்கு சிரிச்சனோ என்னமோ…

இதெல்லாம் நினைக்க நினைக்க அழுகையா வருது … நான் ஏன் அன்னைக்கு உங்க லேப்டாப்பை பாத்தேன் … ஏன் அதுக்கு அடுத்து எல்லாம் நடந்துச்சுனு இருக்கு… நான் என்னை மறந்து என்னையே இழக்கிற அளவுக்கு உங்க மேல லவ்ல இருந்தேன்… இது உங்களுக்கும் தெரியும் தானே… அப்புறம் ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க ” என்று கேட்கும்போது அழுதுவிட்டாள் பெண்ணவள் .

அபிமன்யுவின் ஆளை இழுத்து அடக்கிக் கொள்ளும் காதலுக்கு ஏங்கிய பாவையவளின் இதழ்கள் அழுகையில் துடிக்க , தன்னவனின் முரட்டுத்தனமான காதலை நினைத்துப் பார்த்தவள் , “ நான் உங்களோட பேசாம போனதுக்கு சரியான காரணம் இருக்கு… ஆனா உங்களுக்கு அப்படி இருக்கா … நான் அவாய்ட் பண்ணதை மட்டும் சொல்லிடாதீங்க … உங்களை விட நான் ரொம்ப வயசுல சின்னப் பொண்ணு… என்கிட்ட மனசு விட்டு ஏதாவது சொன்னீங்களா … சொன்னதுக்கு அப்புறம் தான் அவாய்ட் பண்றீங்களே … உங்களை நான் எப்படி புரிஞ்சுக்கிறது ?

நீங்க இப்படி இருக்கிறதை எல்லாம் பாத்தா , அன்னைக்கே செத்து போயிருக்கலாம்னு தோணுது … இங்க எல்லாரும் அவங்க அவங்க புருஷன் கூட ஹாப்பியா இருக்காங்க … நான் மட்டும் தனியா இருக்கேன் … தாத்தா பாட்டில இருந்து உங்க தங்கச்சி வரைக்கும்… திலோ ஃபோன்ல பேசுனாலும் எவ்வளவு ஹாப்பியா இருக்கா தெரியுமா ?

நீங்க இங்க இருந்து போனதுல இருந்து ஒரு ஃபோன் கூட இல்ல … அந்த அளவுக்கு என்கூட ஈகோவா சொல்லுங்க … எனக்கு உங்க கூட லைபை ஸ்டார்ட் பண்ணனும்… என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது… எனக்கு நீங்க வேணும்…” என்பதை தீவிரமான குரலில் கூறியவளின் தொ னி யில் ஆக்ரோஷமான காதல் தெறிக்க , கணவனுக்கு அந்த ரெக்கார்ட்டை அனுப்பி வைத்தாள்.

அனுப்பிவிட்டு ஃபோனை வைத்தவள் , அவனின் போர்வையையே தன் மேல் சுற்றிக் கொண்டு கணவனின் படுக்கையில் சிற்பி செதுக்கிய சிற்பமாய் துயில் கொள்ள , கனடாவில் அப்போது தான் அறைக்குள் வந்த அபிமன்யு சோர்வுடன் ஃபோனை எடுத்திருக்க , மனையாளின் மெசேஜ் வந்திருப்பது பார்த்தான்.

எப்படியும் சண்டை போட்டுத்தான் அனுப்பியிருப்பாள் என்ற எதிர்பார்ப்புடன் அபிமன்யு குறும்புடனும் , மென்னகை கலந்துகொள்ள , மனையாளின் மெசேஜை திறந்தான் .

அடுத்து ஓடிய தன்னவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆடவனின் மூளையை ம ர த்துப் போகச் செய்ய , தன்னவளின் அழுகுரலை கேட்ட அபிமன்யுவின் , உடல் , பொருள் , ஆவி அனைத்தும் ஆடிப்போக ,

தன்னவளின் சிறு மனதில் இருந்த பெரும் வேதனையும் , ஏக்கமும் அவளின் மேல் அளவில்லாத காதலை கொண்டவனின் இதயம் மௌன மொழியை கடைபிடித்தாலும் , அவனின் இரும்பு உள்ளத்தை அவனவளின் வார்த்தைகள் கடுந்தீயாய் மாறி உருக்கிக் கொண்டிருந்தது .

அதுவும் , ‘ செத்து போயிருக்கலாம் ’ என்ற பெண்ணவளின் வார்த்தை இந்த அபிமன்யுவின் சகலத்தையும் ஆட வைத்திருக்க , தன்னவ ள் கண்ணீருடன் நேரில் நிற்பதை போன்று உணர்ந்த அபிமன்யுவின் கரங்கள் முதல்முறை நடுங்கியது.

அடுத்த நொடி யோசிக்கும் சக்தியை கூட இழந்த அபிமன்யு , தன்னவளுக்கு அழைக்க , நன்றாக சுகமாய் தன்னவனின் படுக்கையில் பொதிந்து உறங்கிக் கொண்டிருந்தவள் , ஃபோனை சைலன்ட்டில் போட்டிருந்தாள்.

மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தவனுக்கு மனம் கேட்கவில்லை. நாளை ஒரே ஒரு வேலை மட்டும் மிச்சம் இருந்தது. இப்போதே செல்ல வேண்டும் என்ற பரபரப்பு அவனுக்குள் .

நீண்டதொரு யோசனைக்கு பிறகு இதை செய்யலாமா என்று பல மணித்துளிகள் யோசித்தவன் , கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு பின் , தனது இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை அழுந்த வருடி , முழு மனதுடன் , உத்ராவிற்கு , “ ஸாரி” என்ற ஒற்றை மெசேஜை அனுப்ப , உத்ராவின் அலைபேசி விட்டால் அபிமன்யு கொடுத்த அதிர்ச்சியில் வெடித்துச் சிதற காத்திருக்க , அபிமன்யுவின் அலைபேசி கோமாவிற்கு சென்றது.

வேங்கையெனச் சிலிர்த்தெழும் ஆடவன் , இப்போது தன்னவளுக்காக முற்றிலுமாக தன் மொத்த பிடிவாதத்தையும் , கோபதாபங்களையும் தூக்கி எறிந்திருக்க , எப்போதும் இருக்கும் வேங்கையைத் தாண்டி , காதலே என் குருதி எனும் அந்த அபிமன்யுவின் அற்புத வதனத்தை பார்க்க , நிலவு மகள் சொக்கிப் போனாள்.

அடுத்த இரண்டு நாட்களில் அபிமன்யு சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்க , அபிமன்யுவின் ராட்சஷ கருப்பு நிற புகாடியுடன் விக்ரம் நின்றிருந்தான். தனக்கென்ற திமிரும் , ஆணவமும் கலந்த தோரணையும் ஆக்ரோஷமுமாக அபிமன்யு வந்து காரை உயர் வேகத்தில் எடுக்க , சகோதரனின் அருகே அமர்ந்தான் விக்ரம் .

ஆம்! உத்ரா மீண்டும் கடத்தப்பட்டு இருந்தாள். அவள் மட்டுமல்ல , நீரஜா , நறுமுகை , திலோத்தமை , மித்ரா ஆகியோரும் .