LNCrawler

திருக்குறள்

திருக்குறள் — www.projectmadurai.org · All chapters

திருக்குறள்

tirukuRaL of tiruvaLLuvar:

(in Tamil Script, unicode/UTF-8 format)

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

திருக்குறள்

1. அறத்துப்பால்

1.1 கடவுள் வாழ்த்து

1.1.1 கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.       1

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.       2

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.      3

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.       4

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.      5

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.       6

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.      7

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.      8

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.      9

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.       10

1.1.2 வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.     11

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.     12

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.      13

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.      14

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.      15

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.      16

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.      17

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.      18

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.      19

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.      20

1.1.3. நீத்தார் பெருமை ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.      21

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.      22

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.      23

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.      24

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.      25

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.      26

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.      27

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.      28

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.      29

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.      30 1.1.4. அறன்வலியுறுத்தல் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.      31

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.      32

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.      33

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.      34

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.      35

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.      36

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.      37

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.      38

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.      39

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.      40

1.2. இல்லறவியல்

1.2.1. இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.      41

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.      42

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.      43

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.      44

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.      45

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்?      46

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.      47

ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.      48

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.      49

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்.      50

1.2.2 வாழ்க்கைத் துணைநலம் மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.      51

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.      52

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை?      53

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.      54

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.      55

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.      56

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.      57

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.      58

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.      59

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.      60

1.2.3 புதல்வரைப் பெறுதல் பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.      61

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.      62

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.      63

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.      64

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.      65

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.      66

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.      67

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.      68

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.      69

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்.      70

1.2.4 அன்புடைமை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.      71

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.      71

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.      73

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.      74

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.      75

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.      76

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.      77

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.      78

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.      79

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.      80

1.2.5. விருந்தோம்பல் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.      81

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.      82

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.      83

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.      84

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.      85

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு.      86

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.      87

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.      88

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.      89

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குநழ்யும் விருந்து.      90

1.2.6 இனியவைகூறல் இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.      91

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.      92

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.      93

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.      94

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.      95

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.      96

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.      97

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.      98

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது?      99

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.      100

1.2.7 செய்ந்நன்றி அறிதல் செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.      101

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.      102

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.      103

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.      104

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.      105

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.      106

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.      107

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.      108

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.      109

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.      110

1.2.8 நடுவு நிலைமை தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.      111

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.      112

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.      113

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.      114

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.      115

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.      116

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.      117

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.      118

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.      119

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.      120

1.2.9. அடக்கமுடைமை அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.      121

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.      122

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.      123

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.      124

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.      125

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.      126

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.      127

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.      128

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.      129

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.      130

1.2.10. ஒழுக்கமுடைமை ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.      131

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.      132

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.      133

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.      134

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.      135

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.      136

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.      137

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.      138

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.      139

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.      140

1.2.11. பிறனில் விழையாமை பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.      141

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.      142

விளிந்தா஡஢ன் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்து ஒழுகு வார்.      143

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.      144

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.      145

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.      146

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.      147

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.      148

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.      149

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.      150

1.2.12. பொறையுடைமை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.      151

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.      152

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.      153

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொநற்யுடைமை

போற்றி யொழுகப் படும்.      154

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.      155

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.      156

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.      157

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்.      158

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.      159

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.      160

1.2.13 அழுக்காறாமை ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.      161

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.      162

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.      163

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.      164

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.      165

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.      166

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.      167

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.      168

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.      169

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.      170

1.2.14. வெஃகாமை நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.       171

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.       172 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.       173 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.       174 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.       175 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.       176 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.       177 அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.       178 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு.       179 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.       180

1.2.15. புறங்கூறாமை அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.       181 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.       182 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூற்றும் ஆக்கத் தரும்.       183 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல்.       184 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்.       185 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.       186 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.       187 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.       188 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.       189 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.       190

1.2.16. பயனில சொல்லாமை பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.       191 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.       192 நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.       193 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.       194 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.       195 பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.       196 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.       197 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.       198 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.       199 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.       200

1.2.17. தீவினையச்சம் தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.       201 தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.       202 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.       203 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.       204 இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து.       205 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.       206 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.       207 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அஇஉறைந் தற்று.       208 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.       209 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.       210

1.2.18. ஒப்புரவறிதல் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.       211 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.       212 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.       213 ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.       214 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.       215 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.       216 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.       217 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.       218 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.       219 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.       220 1.2.19. ஈகை வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.       221 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.       222 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள.       223 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு.       224 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.       225 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.       226 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.       227 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.       228 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.       229 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.       230

1.2.20. புகழ் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.      231 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.       232 ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.       233 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.       234 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.       235 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.       236 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்?       237 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.       238 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.       239 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.       240 இல்லறவியல் முற்றிற்று

1.3 துறவறவியல்

1.3.1 அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.      241

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.      242 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.      243 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.      244 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லன்மா ஞாலங் கரி.      245 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.      246 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.      247 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.      248 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.      249 வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.      250

1.3.2. புலான்மறுத்தல் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்?      251 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.      252 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.      253 ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்.      254 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.       255 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.      256 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்.      257 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.      258 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.      259 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்.      260

1.3.3 தவம் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.      261 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது.      262 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்.      263 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.      264 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.      265 தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.      266 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.      267 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.      268 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.      269 இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.      270

1.3.4. கூடாவொழுக்கம் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.      271 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.      272 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.      273 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.      274 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும்.      275 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.      276 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

முக்கிற் கரியார் உடைத்து.      277 மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.      278 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.      279 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.      280

1.3.5. கள்ளாமை எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.      281 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.      282 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.      283 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.      284 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.      285 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.      286 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.       287 அளவறாந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.      288 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.      289 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு.       290

1.3.6. வாய்மை வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.      291 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.      292 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.      293 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.      294 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.      295 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.      296 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.      297 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.      298 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.      299 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.      300

1.3.7 வெகுளாமை செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்?      301 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.      302 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.      303 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.      304 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.      305 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.      306 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.      307 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.      308 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.      309 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.      310

1.3.8 இன்னாசெய்யாமை சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.      311 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.       312 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.      313 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.      314 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.      315 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.      316 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.      317 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.      318 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்.      319 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.      320

1.3.9 கொல்லாமை அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.      321 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.      322 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.      323 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.      324 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.      325 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணுங் கூற்று.      326 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை.      327 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.      328 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.      329 உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.      330

1.3.10 நிலையாமை நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.      331 கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.      332 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.      333 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.      334 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்      335 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.      336 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.      337 குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.      338 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.      339 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.      340

1.3.11 துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.      341 வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.      342 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.      343 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.      344 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.      345 யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.      346 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர் க்கு.      347 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.      348 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.      349 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.      350

1.3.12 மெய்யுணர்தல் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.      351 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.      352 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.      353 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.      354 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.      355 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.      356 ஓர்த்துள்ளம் உள்ளது உணரான் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.      357 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.      358 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.      359 காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.      360

1.3.13 அவாவறுத்தல் அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.      361 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.      362 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்பது இல்.      363 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.      364 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.      365 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.      366 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.      367 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.      368 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.      369 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.      370

1.4 ஊழியல் 1.4.1. ஊழ் ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.      371

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.      372 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.      373 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.      374 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.      375 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம.      376 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.      377 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின்.      378 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்?      379 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.      380

ஊழியல் முற்றிற்று

அறத்துப்பால் முற்றிற்று

திருக்குறள்

2. பொருட்பால்

2.1 அரசியல்

2.1.1 இறைமாட்சி படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.       381 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.      382 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.      383 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.      384 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.      385 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்      386 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.       387 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.      388 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.      389 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.      390

2.1.2 கல்வி கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.      391 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.      392 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.      393 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.      394 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.      395 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.       396 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.      397 ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.      398 தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.       399 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.       400

2.1.3 கல்லாமை அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.       401 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.       402 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.       403 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.       404 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.       405 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.       406 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.       407 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட் ட திரு.       408 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.       409 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.       410

2.1.4 கேள்வி செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.       411 செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.       412 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.       413 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.       414 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.       415 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.       416 பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.       417 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.       418 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது.       419 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?       420 2.1.5 அறிவுடைமை அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.       421 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.       422 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.       423 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.       424 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.       425 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.       426 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.       427 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.       428 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.       429 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.       430

2.1.6 குற்றங்கடிதல் செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.       431 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.       432 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.       433 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் த்ரூஉம் பகை.       434 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.       435 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு?       436 செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.       437 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன் றன்று.       438 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.       439 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.       440 2.1.7 பெரியாரைத் துணைக்கோடல் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.       441 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.       442 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.       443 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.       444 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.       445 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.       446 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.       447 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.       448 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.       449 பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.       450 2.1.8 சிற்றினஞ்சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.       451 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.       452 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.       453 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு.       454 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.       455 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.       456 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.       457 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.       458 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.       459 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.       460

2.1.9 தெரிந்துசெயல்வகை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.       461 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்       462 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.       463 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.       464 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.       465 செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.       466 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.       467 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.       468 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.       469 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு.       470

2.1.10 வலியறிதல் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.       471 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.       472 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.       473 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.       474 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.       475 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.       476 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.       477 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.       478 அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.       479 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.       480 2.1.11 காலமறிதல் பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.       481 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.       482 அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.       483 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.       484 காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.       485 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.      486 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.       487 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.       488 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.       489 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.       490 2.1.12 இடனறிதல் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.       491 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.       492 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.       493 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.       494 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.       495 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.       496 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.       497 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.       498 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.       499 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.       500

2.1.13 தெரிந்துதெளிதல் அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.       501 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் சுட்டே தெளிவு.       502 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.       503 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.       504 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.       505 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.       506 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.       507 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.       508 தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.       509 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.       510

2.1.14 தெரிந்துவினையாடல் நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.       511 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.       512 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.       513 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.       514 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.       515 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.       516 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.       517 வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.       518 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.       519 நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.       520

2.1.15 சுற்றந்தழால் பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.       521 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்.       522 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.       523 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.       524 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.       525 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.       526 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.       527 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.       528 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.       529 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.       530

2.1.16 பொச்சாவாமை இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.       531 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.       532 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.       533 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.       534 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும்.       535 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்பது இல்.       536 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.       537 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.       538 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.       539 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.       540

2.1.17 செங்கோன்மை ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.       541 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.       542 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.       543 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.       544 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.       545 வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.       546 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.       547 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.       548 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.       549 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.       550

2.1.18 கொடுங்கோன்மை கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.       551 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.       552 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.       553 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.       554 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை       555 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.       556 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.       557 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்.       558 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.       559 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.       560

2.1.19 வெருவந்தசெய்யாமை தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.       561 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.       562 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.       563 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.       564 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.       565 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.       566 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.       567 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறிற் சிறுகும் திரு.       568 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.       569 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.       570

2.1.20 கண்ணோட் டம் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.       571 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.       572 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.       573 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.       574 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்       575 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.       576 கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.       577 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.       578 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.       579 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.       580

2.1.21 ஒற்றாடல் ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.       581 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.       582 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்தது இல்.       583 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று.       584 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.       585 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று.       586 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.       587 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.       588 ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.       589 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.       590

2.1.22 ஊக்கமுடைமை உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்

உடையது உடையரோ மற்று.       591 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.       592 க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.       593 க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.       594 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.       595 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.       596 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.       597 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.       598 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

஦வ்ருஉம் புலிதாக் குறின்.       599 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.       600

2.1.23 மடியின்மை குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.       601 மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.       602 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.       603 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.       604 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.       605 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.       606 இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.       607 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.       608 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.       609 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.       610 2.1.24 ஆள்வினையுடைமை அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.       611 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.       612 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.       613 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.       614 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.       615 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.       616 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள்.       617 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.       618 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.       619 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.       620

2.1.25 இடுக்கணழியாமை இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.       621 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.       622 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.       623 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.       624 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்.       625 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.       626 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்.       627 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.       628 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.       629 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.       630 அரசியல் முற்றிற்று

2.2. அங்கவியல்

2.2.1 அமைச்சு கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு.       631 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.       632 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.       633 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு.       634 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.       635 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.       636 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.       637 அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்.       638 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.       639 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.       640 2.2.2 சொல்வன்மை நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.       641 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.       642 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.       643 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.       644 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.       645 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.       646 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.       647 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.       648 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.       649 இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.       650

2.2.3 வினைத்தூய்மை துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.       651 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.       652 ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.       653 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.       654 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.       655 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க

சான்றோர் பழிக்கும் வினை.       656 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.       657 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.       658 அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.       659 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.       660 2.2.4 வினைத்திட்பம் வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.       661 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.       662 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்.       663 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.       664 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.       665 எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.       666 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.       667 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.       668 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.       669 எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.       670

2.2.5 வினைசெயல்வகை சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.       671 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.       672 ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.       673 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.       674 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.       675 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.       676 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்.       677 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.       678 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்.       679 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.       680

2.2.6 தூது அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.       681 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.       682 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.       683 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.       684 தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது.       685 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.       686 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.       687 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.       688 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சேரா வன்க ணவன்.       689 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு

உறுதி பயப்பதாம் தூது.       690 2.2.7 மன்னரைச் சேர்ந்தொழுதல் அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.       691 மன்னர் விழைப விழையாமை மன்னரால்

மன்னிய ஆக்கந் தரும்.       692 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.       693 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.       694 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.       695 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல்.       696 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்.       697 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும்.       698 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.       699 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.       700

2.2.8 குறிப்பறிதல் கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.       701 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்.       702 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.       703 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு.       704 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்?       705 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.       706 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.       707 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின்.       708 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்.       709 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

கண்ணல்லது இல்லை பிற.       710 2.2.9 அவையறிதல் அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.       711 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.       712 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉம் இல்.       713 ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.       714 நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.       715 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.       716 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.       717 உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று.       718 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்குசலச் சொல்லு வார்.       719 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்.       720 2.2.10 அவையஞ்சாமை வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.       721 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.       722 பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.       723 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.       724 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.       725 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.       726 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.       727 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.       728 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.       729 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.       730

அமைச்சியல் முற்றிற்று

2.3 அங்கவியல்

2.3.1 நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.       731 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.       732 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.       733 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.       734 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.       735 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.       736 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.       737 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.       738 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.       739 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.       740 2.3.2 அரண் ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.       741 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.       742 உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்.       743 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்.       744 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீரது அரண்.       745 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.       746 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.       747 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.       748 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண்.       749 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.       750 2.3.3 பொருள்செயல்வகை பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.       751 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.       752 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.       752 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.       754 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.       755 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.       756 அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.       757 குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.       758 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.       759 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.       760 2.3.4 படைமாட்சி உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.       761 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது.       762 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.       763 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.       764 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.       765 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.       766 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.       767 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.       768 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.       769 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.       770 2.3.5 படைச்செருக்கு என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.       771 கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.       772 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.       773 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.       774 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.       775 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.       776 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.       777 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.       778 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.       779 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து.       780 2,3.6 நட்பு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.      7811 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.       782 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.       783 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்செனறு இடித்தற் பொருட்டு.       784 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.       785 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.       786 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.       787 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.       788 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.       789 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.       790 2.3.7 நட்பாராய்தல் நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.      791 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.       792 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.      793 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.       794 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.       795 கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.       796 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.       797 உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.       798 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.       799 மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.      800 2.3.8 பழைமை பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.       801 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.       802 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை.       803 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.      804 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.      805 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.      806 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.      807 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்.      808 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.      809 விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.       810 2.3.9 தீ நட்பு பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.      811 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்?       812 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.       813 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.       814 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.      815 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.       816 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.       817 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.       818 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.       819 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.      820 2.3.10 கூடாநட்பு சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை

நேரா நிரந்தவர் நட்பு.       821 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.       822 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க் கரிது.      823 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.       824 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.      825 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.       826 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.      827 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.      828 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.       829 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.       830 2.3.11 பேதைமை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்.      831 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல்.       832 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்       833 ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.       834 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.      835 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.      836 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.      837 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.      838 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்.       839 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.       840 2.3.12 புல்லறிவாண்மை அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.       841 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்

இல்லை பெறுவான் தவம்.       842 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.       843 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.       844 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.       845 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.       846 அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.       847 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.       848 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.       849 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.       850 2.3.13 இகல் இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.       851 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.       852 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்.       853 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.       854 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிக்லூக்கும் தன்மை யவர்.       855 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.       856 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.       857 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.      858 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.      859 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.       860

2.3.14 பகைமாட்சி வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.       861 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.       862 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.       863 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.       864 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு இனிது.      865 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.       866 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.       867 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

இனனிலனாம் ஏமாப் புடைத்து.      868 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.       869 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.       870

2.3.15 பகைத்திறந்தெரிதல் பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.       871 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.      872 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.      873 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற்று உலகு.      874 தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.      875 தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல்.      876 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து.      877 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.      878 இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.       879 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.      880 2.3.16 உட்பகை நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.       881 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.       882 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.      883 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும்.       884 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.       885 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.      886 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி.      887 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி.      888 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.       889 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.      890 2.3.17 பெரியாரைப் பிழையாமை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.      891 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.      892 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.      893 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்.      894 யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.       895 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.      896 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.      897 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.      898 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.       899 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.       900 2.3.18 பெண்வழிச்சேறல் மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

வேண்டாப் பொருளும் அது.       901 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.      902 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணுத் தரும்.      903 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.      904 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.      905 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்.      906 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.      907 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட் டாங்கு ஒழுகு பவர்.       908 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ஏவல் செய்வார்கண் இல்.      909 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.       910 2.3.19 வரைவின்மகளிர் அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்.      911 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்.      912 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று.      913 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர்.      914 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.      915 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.       916 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள்.      917 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.      918 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.      919 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.       920 2.3.20 கள்ளுண்ணாமை உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.      921 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.      922 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.      923 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.      924 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.      925 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.      926 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்3       927 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.      928 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.      929 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.      930 2.3.21 சூது வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.       931 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.      932 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.      933 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல்.      934 கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.      935 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

முகடியான் மூடப்பட் டார்.       936 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்.      937 பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது.       938 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயங் கொளின்.       939 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர்.       940 2.3.22 மருந்து மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.       941 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.       942 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.      943 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.      944 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.      945 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.      946 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.       947 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.      948 உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.       949 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து.       950 2.4 ஒழிபியல் 2.4.1 குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.       951 ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.       952 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.       953 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.       954 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.       955 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்தும் என் பார்.       956 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.       957 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.       958 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.       959 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.      960 2.4.2 மானம் இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.      961 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்.       962 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.       963 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.       964 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.       965 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை.       966 ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.       967 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து.       968 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.      969 இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு.       970 2.4.3 பெருமை ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.       971 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.      972 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.      973 ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.       974 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.       975 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.       976 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.       977 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.       978 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.      979 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.       980

2.4.4 சான்றாண்மை கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.      981 குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்து உள்ளதூஉம் அன்று.       982 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்.       983 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.       984 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.       985 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.       986 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.       987 இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

திண்மை உண் டாகப் பெறின்.      988 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்.       989 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை.      990 2.4.5 பண்புடைமை எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.      991 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.       992 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.       993 யனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.      994 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.      995 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.      996 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.      997 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.       998 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.       999 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.      1000 2.4.6 நன்றியில்செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.       1001 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு       1002 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.      1003 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.      1004 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.      1005 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான்.      1006 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.      1007 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.       1008 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.       1009 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து.       1010 2.4.7 நாணுடைமை கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.       1011 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.       1012 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு.       1013 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை.      1014 பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு.      1015 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.      1016 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.       1017 பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.       1018 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.      1019 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.      1020 2.4.8 குடிசெயல்வகை கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல்.       1021 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.      1022 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.      1023 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

தாழாது உஞற்று பவர்க்கு.      1024 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.      1025 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.      1026 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.      1027 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.      1028 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பான் உடம்பு.      1029 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்

நல்லாள் இலாத குடி.      1030 2.4.9 உழவு சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.       1031 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.      1032 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.       1033 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.       1034 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.      1035 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.      1036 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.      1037 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.      1038 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.      1039 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.      1040 2.4.10 நல்குரவு இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.      1041 இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.       1042 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை.       1043 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.      1044 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.      1045 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.      1046 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.       1047 இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.      1048 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.      1049 துப்புர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.      1050 2.4.11 இரவு இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.      1051 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.       1052 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ரேஎர் உடைத்து.      1053 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.      1054 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.       1055 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.       1056 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.      1057 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.      1058 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.      1059 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.      1060 2.4.12 இரவச்சம் கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்.       1061 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.       1062 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.       1063 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.       1064 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்கினிய தில்.      1065 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்த தில்.       1066 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று.       1067 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.       1068 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.      1069 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.       1070 2.4.13 கயமை மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.       1071 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்.       1072 தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.       1073 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.       1074 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.      1075 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.       1076 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.       1077 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.       1078 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.       1079 எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து.       1080 ஒழிபியல் முற்றிற்று

பொருட்பால் முற்றிற்று

திருக்குறள்

3. காமத்துப்பால்

3.1 களவியல் 3.1.1 தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.      1081

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.       1082

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.       1083

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.       1084

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.       1085

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.       1086

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.       1087

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.       1088

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து.       1089

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.      1090

3.1.2 குறிப்பறிதல் இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.      1091

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.       1092

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.       1093

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.       1094

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்       1095

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.       1096

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.       1097

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.       1098

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.       1099

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.       1100

3.1.3 புணர்ச்சிமகிழ்தல் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.       1101

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.       1102

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.       1103

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்?       1104

வேட் ட பொழுதின் அவையவை போலுமே

தோட் டார் கதுப்பினாள் தோள்.       1105

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்.       1106

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.       1107

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.       1108

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.       1109

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.       1110

3.1.4 நலம்புனைந்துரைத்தல் நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.      1111

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.       1112

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.       1113

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.       1114

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை.       1115

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.       1116

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.       1117

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.       1118

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.       1119

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.       1120

3.1.5 காதற்சிறப்புரைத்தல் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.       1121

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.       1122

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம்.       1123

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து.       1124

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.       1125

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா

நுண்ணியர்எம் காத லவர்.       1126

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து.       1127

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து.       1128

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ் வூர்.       1129

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னும் இவ் வூர்.       1130

3.1.6 நாணுத்துறவுரைத்தல் காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி.       1131

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.       1132

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்.       1133

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.       1134

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.       1135

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண்.       1136

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.       1137

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.       1138

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.       1139

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.       1140

3.1.7 அலரறிவுறுத்தல் அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.       1141

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.       1142

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.       1143

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.       1144

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.       1145

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.       1146

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்.       1147

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.       1148

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.       1149

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் வூர்.       1150

களவியல் முற்றிற்று

3.2 கற்பியல்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.      1151

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.       1152

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.       1153

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு.       1154

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.       1155

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.       1156

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.       1157

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.       1158

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.       1159

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.       1160

3.2.2 படர்மெலிந்திரங்கல் மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.       1161

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும்.       1162

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து.       1163

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.       1164

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்.       1165

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.       1166

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.       1167

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை.       1168

> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா.       1169

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.       1170

3.2.3 கண்விதுப்பழிதல் கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாம்காட்ட யாம்கண் டது.      1171

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்பது எவன்?       1172

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.       1173

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து.       1174

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண்.       1175

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.       1176

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண்.       1177

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண்.       1178

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.       1179

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து.       1180

3.2.4 பசப்புறுபருவரல் நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற.       1181

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.       1182

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.       1183

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.       1184

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்பூர் வது.       1185

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.       1186

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.       1187

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல்.       1188

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.       1189

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின்.       1190

3.2.5 தனிப்படர்மிகுதி தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.       1191 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.       1192 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.       1193 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின்.       1194 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.       1195 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல

இருதலை யானும் இனிது.       1196 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்.       1197 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.       1198 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.       1199 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.       1200

3.2.6 நினைந்தவர்புலம்பல் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.       1201 எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று ஏல்.       1202 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.       1203 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர்.       1204 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.       1205 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்

உற்றநாள் உள்ள உளேன்.       1206 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.       1207 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.       1208 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து.       1209 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி.       1210

3.2.7 கனவுநிலையுரைத்தல் காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து.       1211 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.      1212 நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.      1213 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.       1214 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.       1215 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.       1216 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

என்எம்மைப் பீழிப் பது.       1217 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.       1218 நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர்.      1219 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர்.      1220

3.2.8 பொழுதுகண்டிரங்கல் மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.      1221 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை.      1222 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும்.      1223 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.      1224 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை?      1225 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.       1226 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.       1227 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.       1228 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.       1229 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர்.      1230

3..2. 9 உறுப்புநலனழிதல் சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.       1231 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.       1232 தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.       1233 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.       1234 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.       1235 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து.       1236 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.       1237 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.      1238 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.       1239 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.       1240

3.2.10 நெஞ்சொடுகிளத்தல் நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து.      1241 காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழியென் நெஞ்சு.       1242 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல்.       1243 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று.       1244 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்.      1245 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.       1246 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு.       1247 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.       1248 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ

யாருழைச் சேறியென் நெஞ்சு.       1249 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின்.       1250

3.2.11 நிறையழிதல் காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.       1251 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில்.       1252 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்.       1253 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும்.       1254 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று.       1255 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர்.       1256 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின்.       1257 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை.       1258 புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்

கலத்தல் உறுவது கண்டு.       1259 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல்.       1260

3.2.12 அவர்வயின்விதும்பல் வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.       1261 இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து.       1262 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன்.       1263 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் நெஞ்சு.       1264 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்கும்என் மென்தோள் பசப்பு.       1265 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.      1266 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்அன்ன கேளிர் விரன்.       1267 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து.       1268 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.       1269 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால்.       1270

3.2.13 குறிப்பறிவுறுத்தல் கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.       1271 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.       1272 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு.       1273 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.       1274 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.       1275 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.       1276 தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.      1277 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.       1278 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது.      1279 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.      1280

3.2.14 புணர்ச்சிவிதும்பல் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.      1281 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்

காமம் நிறைய வரின்.      1282 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண்.       1283 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றது என் னெஞ்சு.      1284 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.      1285 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை.      1286 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து.      1287 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு.      1288 மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.      1289 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று.      1290

3.2.15 நெஞ்சொடுபுலத்தல் அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது.       1291 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.      1292 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்.      12983 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.       1294 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.       1295 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.       1296 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு.       1297 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.       1298 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.       1299 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.       1300

3.2.16 புலவி புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.       1301 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.       1302 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்.       1303 ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.       1304 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து.       1305 துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.       1306 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.       1307 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

காதலர் இல்லா வழி.       1308 நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.       1309 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா.       1310 3.2.17 புலவி நுணுக்கம் பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.       1311 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.       1312 கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.       1313 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.       1314 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.       1315 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.       1316 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.       1317 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.       1318 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.       1319 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.       1320

3.2.18 ஊடலுவகை இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு.       1321 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்.       1322 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து.       1323 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.       1324 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.       1325 உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.       1326 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்.       1327 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.       1328 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.       1329 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.       1330

கற்பியல் முற்றிற்று

காமத்துப்பால் முற்றிற்று

திருக்குறள் முற்றிற்று