திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்) (1)
திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்) (1)
tirumantiram of tirumUlar - part IIIa(in Tamil Script, Unicode/UTF-8 format)திருமந்திரம்- (திருமூலர்)ஏழாம் தந்திரம் (1704- 2121)This webpage with Tamil Text is based on Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
http://www.projectmadurai.org/திருமந்திரம்ஏழாம் தந்திரம்1. ஆறு ஆதாரம்1704நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 11705ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்திபோதா லயத்துஅ விகாரந்தனிற்போதமேதாதி ஆதார மீதான உண்மையே. 21706மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால்தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 31707ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளிபோதா லயத்துப் புலன்கர ணம் புத்திசாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. 41708மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டிஆதார சோதனை அத்துவ சோதனைதாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால்ஆதாரஞ் செய்போக மாவது காயமே. 51709ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில்கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலேஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 61710ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 71711ஆயு மலரின் அணிமலர் மேலதுஆய இதழும் பதினாறும் அங்குளதூய அறிவு சிவானந்த மாகிப்போய்மேய அறிவாய் விளைந்தது தானே. 82. அண்டலிங்கம் (உலக சிவம்)1712இலிங்கம தாவது யாரும் அறியார்இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்இலிங்கம தாக எடுத்தது உலகே. 11713உலகில் எடுத்தது சத்தி முதலாஉலகில் எடுத்தது சத்தி வடிவாய்உலகில் எடுத்தது சத்தி குணமாய்உலகில் எடுத்த சதாசிவன் தானே. 21714போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்ஆகம அத்துவா ஆறும் சிவமே. 31715ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனைவாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்றுஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்றுகாத்தனன் என்னும் கருத்தறி யாரே. 41716ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதிஒண்சுட ரான இரவியோடு இந்திரன்கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 51717தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன்மாபரத் துண்மை வழிபடு வாரில்லைமாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும்பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 61718தூவிய விமானமும் தூலமது ஆகுமால்ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 71719முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 81720துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்கன்றிய செம்பு கனல்இர தம்சலம்வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. 91721மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும்குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும்துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 101722அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடிஎதுஉண ராவகை நின்றனன் ஈசன்புதுஉணர் வான புவனங்கள் எட்டும்இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 111723அகலிட மாய்அறி யாமல் அடங்கும்உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளேபகலிட மாம்முனம் பாவ வினாசன்புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 121724போது புனைசூழல் பூமிய தாவதுமாது புனைமுடி வானக மாவதுநீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்ஆதியுற நின்றது அப்பரி சாமே. 131725தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்திரைபொரு நீரது மஞ்சன சாலைவரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலைகரையற்ற நந்திக் கலையும்திக்காமே. 143. பிண்டலிங்கம் (உடற் சிவம்)1726மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 11727உலந்திலர் பின்னும் உளரென நிற்பர்நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப்புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாகவலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 21728கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புகவாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 31729கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறைவாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துளபூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டுவாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 44. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)1730கூடிய பாதம் இரண்டும் படிமிசைபாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும்தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்துநாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 11731வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்சாதா ரணமாம் சதாசிவந் தானே. 21732ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலைஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. 31733அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடுஅத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. 41734சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துளசமயத்து எழுந்த இராசி ஈராறுளசமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுளசமயத்து எழுந்த சதாசிவந் தானே. 51735நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்குநடுவு படிகநற் குங்குமவன்னம்அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. 61736அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுளஅஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுளஅஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. 71737சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்சத்தி சிவமிக்க தாபர சங்கமம்சத்தி உருவம் அருவம் சதாசிவம்சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. 81738தத்துவ மாவது அருவம் சராசரம்தத்துவ மாவது உருவம் சுகோதயம்தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 91739கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறைவேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடுமாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. 101740இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. 111741சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்அத்தரு கோரம் மருடத்துஈ சானனே. 121742நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்காணும் அகோரம் இருதயம் குய்யமாம்மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. 131743நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. 141744எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதிவண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 151745சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்சத்தி உருவாம் சதாசிவன் தானே. 161746மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும்கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. 171747ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்துஎன்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பதுதென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடிநின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. 181748உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யேபணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. 191749ஆங்கவை Yமூன்றினும் ஆரழல் வீசிடத்தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமெனஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 201750தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்தன்மேனி தானாகும் தற்பரம் தானே. 211751ஆரும் அறியார் அகாரம் அவனென்றுபாரும் உகாரம் பரந்திட்ட நாயகிதாரம் இரண்டும் தரணி முழுதுமாய்மாறி எழுந்திடும் ஓசையதாமே. 221752இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 235. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் )1753அகார முதலா அனைத்துமாய் நிற்கும்உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்அகார உகாரம் இரண்டும் அறியில்அகார உகாரம் இலிங்கம் தாமே. 11754ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்மேதாதி நாதமும் மீதே விரிந்தனஆதார விந்து ஆதிபீட நாமேபோதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 21755சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்சத்தி சிவமாகும் தாபரம் தானே. 31756தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 41757விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. 51758சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மாசத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 61759மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கைமனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போதுநலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 71760பராபரன் எந்தை பனிமதி சூடிதராபரன் தன்னடி யார்மனக் கோயில்சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 81761பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 91762அன்று நின் றான்கிடந் தான்அவன் என்றுசென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னைஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 106. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம் )1763உருவும் அருவும் உருவோடு அருவும்மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்தருவென நல்கும் சதாசிவன் தானே. 11764நாலான கீழது உருவம் நடுநிற்கமேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்பாலாம் இவையாம் பரசிவன் தானே. 21765தேவர் பிரானைத் திசைமுக நாதனைநால்வர் பிரானை நடுவுற்ற நந்தியைஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழியாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 31766வேண்டிநின் றேதொழு தேன்வினை போயறஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்றகாண்டகை யானொடும் கன்னி உணரினும்மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 41767ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறைபாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 51768சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளேசுத்த சிவபதம் தோயாத தூவொளிஅத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 61769கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்பரந்திடம் காணில் பார்ப்பதி மேலேதிரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 71770எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியைஉந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 81771சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகிஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 91772சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணிசத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும்சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைசத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 107. சிவலிங்கம் ( சிவகுரு )1773குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானைவரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 11774வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டுநிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்திஉரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 21775ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனைநன்றென்று அடியிணை நான்அவனைத்தொழவென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புறஅன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 31776மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 41777மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்றுஆவி எழும்அள வன்றே உடலுறமேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்பாவித்து அடக்கிற் பரகதி தானே. 58. சம்பிரதாயம் ( பண்டை முறை )1778உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டுபடர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்துநொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிகடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 11779உயிரும் சரீரமும் ஒண்பொரு ளானவியவார் பரமும்பின் மேவும் பிராணன்செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கேஉயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 21780பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலதுவைச்ச பதமிது வாய்திற வாதே. 31781பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனைஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித்தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 41782தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 51783கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டுநாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்பாடல் உடலினில் பற்றற நீக்கியேகூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 61784கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. 71785குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடிநெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மைபிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 81786உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லைஉணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே. 91787காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்சால விரிந்து குவிந்து சகலத்தில்ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 101788நானென நீயென வேறில்லை நண்ணுதல்ஊனென ஊனுயிர் என்ன உடனின்றுவானென வானவர் நின்று மனிதர்கள்தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 111789அவனும் அவனும் அவனை அறியார்அவனை அறியில் அறிவானும் இல்லைஅவனும் அவனும் அவனை அறியில்அவனும் அவனும் அவனிவன் ஆமே. 121790நானிது தானென நின்றவன் நாடோ றும்ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்நானிது அம்பர நாதனும் ஆமே. 131791பெருந்தன்மை தானென யானென வேறாய்இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யேதிருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 149. திருவருள் வைப்பு1792இருபத மாவது இரவும் பகலும்உருவது ஆவது உயிரும் உடலும்அருளது ஆவது அறமும் தவமும்பொருவது உள்நின்ற போகமது ஆமே. 11793காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 21794குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில்அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 31795தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறைஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 41796தானே அறியும் வினைகள் அழிந்தபின்நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்தேனே யனையன் நம் தேவர் பிரானே. 51797நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனைவான்அறிந் தார் அறி யாது மயங்கினர்ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 61798அருள்எங்கு மான அளவை அறியார்அருளை நுகர்அமு தானதும் தேரார்அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 71799அறிவில் அணுக அறிவது நல்கிப்பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டுஅறிவது ஆக்கி அடியருள் நல்கும்செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 81800அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டுஅருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டுஅருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டிஅருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 91801அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டிஅருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டுஅருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டிஅருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 101802பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 111803பிறவா நெறிதந்த பேரரு ளாளன்மறவா அருள் தந்த மாதவன் நந்திஅறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 121804அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலேஅகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்குஅகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 131805ஆயும் அறிவோடு அறியாத மாமாயைஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்ஆய பலஇந் திரியம் அவற்றுடன்ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 141806அருளே சகலமும் ஆய பவுதிகம்அருளே சராசர மாய அமலமேஇருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 151807சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்துதவமான ஐம்முகன் ஈசன் அரனும்பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறாநவம்அவை யாகி நடிப்பவன் தானே. 161808அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றாஅருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனேஇருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 171809தானே படைத்திடும் தானே அளித்திடும்தானே துடைத்திடும் தானே மறைத்திடும்தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்தானே வியாபித் தலைவனும் ஆமே. 181810தலையான நான்கும் தனதுஅரு வாகும்அலையா அருவுரு வாகும் சதாசிவம்நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. 191811ஒன்றது வாலே உலப்பிலி தானாகிநின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலைதுன்றி அவைஅல்ல வாகும் துணையென்னநின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 201812நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடுஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டுவீயத் தகாவிந்து வாக விளையுமே. 211813விளையும் பரவிந்து தானே வியாபிவிளையும் தனிமாயை மிக்கமா மாயைகிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 2210. அருள் ஒளி1814அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்அருளின் பெருமை அறியார் செறியார்அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 11815வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்திஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்திபேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 21816ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்கூடிய வாறே குறியாக் குறிதந்தென்ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 31817உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணிஅத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்திகற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 41818விளக்கினை யேற்றி வெளியை அறிமின்விளக்கினை முன்னே வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 51819ஒளியும் இருளும் ஒருகாலும் தீராஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்ஒளியுருள் கண்டகண் போலவே றாயுளஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 61820புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டிநிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கிஅறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்ததிறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 71821அருளது என்ற அகலிடம் ஒன்றும்பொருளது என்ற புகலிடம் ஒன்றும்மருளது நீங்க மனம்புகுந் தானைத்தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 81822கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமைவேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர்தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. 911. சிவபூசை1823உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 11824வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 21825பான்மொழி பாகன் பராபரன் தானாகும்ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்துமேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டுசீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 31826நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்கனைகழல் ஈசனைக் காண அரிதாம்கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 41827மஞ்சன மாலை நிலாவிய வானவர்நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 51828புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டுஅண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனைநண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 61829அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்சுத்தம தாக விளக்கித் தெளிக்கவேமுத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 71830மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்திமறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 81831ஆரா தனையும் அமரர் குழாங்களும்தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்பேரா யிரமும் பிரான்திரு நாமமும்ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 91832ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்தான்அந்த மில்லாத் தலைவன் அருளதுதேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 101833உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்திமழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 111834வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்குஉள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டுகள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 121835கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்துவழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்பழிப்படு வார்பல ரும்பழி வீழவெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 131836பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்நயனங்கள் மூன்றுடை யான்அடி சேரவயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 141837ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்றுஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்றதீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 151838தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனைமூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 161839உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணிஇழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவிமழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 171840வென்று விரைந்து விரைப்பணி என்றனர்நின்று பொருந்த இறைபணி நேர்படத்துன்று சலமலர் தூவித் தொழுதிடில்கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 181841சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான்மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 191842ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புறமேவித் திரியும் விரிசடை நந்தியைக்கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 201843காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்காணும் அளவும் கருத்தறி வாரில்லைபேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்குமாணிக்க மாலை மனம்புகுந் தானே. 211844பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமிஇருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ளவருந்தன்மை யாளனை வானவர் தேவர்தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 221845சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்திசமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 231846ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லதுஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டாஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 2412. குருபூசை1847ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 11848கானுறு கோடி கடிகமழ் சந்தனம்வானுற மாமலர் இட்டு வணங்கினும்ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லதுதேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. 21849மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனைஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்சேவடி சேரல் செயலறல் தானே. 31850உச்சியும் காலையும் மாலையும் ஈசனைநச்சுமின் நச்சி நமவென்று நாமத்தைவிச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 41851புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 51852இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடைவந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடைவந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 61853இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தேசிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டுநந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 71854மனபவ னங்களை மூலத்தான் மாற்றிஅனித உடல்பூத மாக்கி அகற்றிப்புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 81855பகலும் இரவும் பயில்கின்ற பூசைஇயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்பகலும் இரவும் பயிலாத பூசைசகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 91856இராப்பகல் அற்ற இடத்தே இருந்துபராக்குஅற ஆனந்தத் தேறல் பருகிஇராப்பகல் அற்ற இறையடி இன்பத்துஇராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 1013. மகேசுவர பூசை1857படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகாநடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 11858தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்துஉண்டது மூன்று புவனமும் உண்டதுகொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்றுஎண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 21859மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறைஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானதுமூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 31860அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்குநிகரில்லை என்பது நிச்சயம் தானே. 41861ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலைபேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 51862ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்றுநீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்றுவேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 61863சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்டபேர்நந்தி என்னும் பிறங்கு சடையனைநான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 71864அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும்பழுது படாவண்ணம் பண்பனை நாடித்தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 81865பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழிஅகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 91866வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 101867தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 1114. அடியார் பெருமை1868திகைக்குரி யானொரு தேவனை நாடும்வகைக்குரி யானொரு வாது இருக்கில்பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 11869அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும்அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்அவ்வுல கத்தே அரனடி கூடுவர்அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 21870கொண்ட குறியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 31871அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 41872பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 51873இயங்கும் உலகினில் ஈசன் அடியார்மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்புயங்களும் எண்டிசை போதுபா தாளமயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 61874அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 71875கழிவும் முதலும் காதல் துணையும்அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப்பழியும் புகழும் படுபொருள் முற்றும்ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே 81876என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. 91877துணிந்தார் அகம்படி துன்னி உறையும்பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 101878தலைமிசை வானவர் தாழ்சடை நந்திமிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்பலமிசை செய்யும் படர்சடை யோனே. 111879அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமைகுறியார் சடைமுடி கட்டி நடப்பார்மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 121880அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்அவன்பால் அணுகியே நாடும் அடியார்இவன்பால் பெருமை இலயமது ஆமே. 131881முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்துஎண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 141882சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 151883மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 1615. போசன விதி1884எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்குகட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 11885அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்துஇச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 216. பிட்சா விதி1886விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டுஉச்சிக்கு முன்னே உழவு சமைந்ததுஅச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 11887பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 21888பரந்துலகு ஏழும் படைத்த பிரானைஇரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்நிரந்தக மாக நினையும் அடியார்இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 31889வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்பொரஇருந் தான்புக லேபுக லாகவரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 41890அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 51891மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்ஐயம் புகாமல் இருந்த தவசியார்வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 617. முத்திரை பேதம்நாலேழு மாறவே நண்ணிய முத்திரைபாலான மோன மொழியில் பதிவித்துமேலான நந்தி திருவடி மீதுய்யக்கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 11893துரியங்கள் மூன்று சொருகுஇட னாகிஅரிய உரைத்தாரம் அங்கே அடக்கிமருவிய சாம்பவி கேசரி உண்மைபெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 21894சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரைஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரிநாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 31895தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்டமோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 41896வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரேஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 51897யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்ஆகத் தகும்வேத கேசரி சாம்பவியோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 61898யோகிஎண் சித்தி அருளொலி வாதனைபோகி தன் புத்தி புருடார்த்த நன்னெறிஆகும்நன் சத்தியும் ஆதார சோதனைஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 71899துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மைநவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 81900மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரைஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரைதேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரைகானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 91901தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்மேல்நெறி கண்டது வெண்மதி மேதினிநீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 1018. பூரணக் குகை நெறிச் சமாதி1902வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னிஉளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 11903தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாதுபோன வியோகி புகலிடம் போந்துபின்ஆனவை தீர நிரந்தர மாயோகம்ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 21904தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கிஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்துதானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 31905சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. 41906ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்தானற மோனச் சமாதியுள் தங்கியேதானவன் ஆகும் பரகாயம் சாராதேஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 51907செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 61908உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானிதன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 71909எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 819. சமாதிக் கிரியை1910அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்நொந்து நாய்நரி நுகரின் நுண்செருவந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 11911எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 21912புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பதுநண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 31913அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 41914நவமிகு சாணாலே நல்லாழம் செய்துகுவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்பவமறு நற்குகை பத்மா சனமே. 51915தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடைநன்மலர்ச் சோலை நகரின்நற் பூமிஉன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 61916நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணிநிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 71917பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்துவிஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டுமுஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலேபொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 81918நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்துஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 91919ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்போதறு கண்ணமும் நறும் பொலிவித்துமீதில் இருத்தி விரித்திடு வீரே. 101920விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்துபொரித்த கறிபோ னகம் இள நீரும்குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வைதரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 111921மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 121922ஆதன மீதில் அரசு சிவலிங்கம்போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்துமேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்காதலில் சோடசம் காண்உப சாரமே. 1320. விந்துற்பனம்1923உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்விதியில் பிரமாதி கள்மிகு சத்திகதியில் கரணம் கலைவை கரியே. 11924செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 21925வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்தந்திடு மாமாயை வாகேசி தற்பரைஉந்து குடிலையோடு ஏமுறு குண்டலிவிந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 31926விளங்கு நிவர்த்தாதி மேலக ராதிவளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்துகளங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணிஉளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 41927அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்வந்த வியாபி எனலாய அந்நெறிகந்தம தாகிய காரண காரியம்தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. 51928வீயம தாகிய விந்துவின் சத்தியால்ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்காயஐம் பூதமும் காரிய மாயையில்ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 61929புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்துநிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மைஉறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 71930கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதறநின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்கண்டக லாதியின் காரண காரியத்துஅண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 81931அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்திஇதுவித்தி லேஉள வாற்றை உணரார்மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 91932வித்தினில் அன்றி முளையில்லை அம்முளைவித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லைவித்தும் முளையும் உடனன்றி வேறில்லைஅத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. 101933அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டுஇருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 111934இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்மருவிய விந்து வளரும்கா யத்திலே. 121935காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்துநேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 131936அழிகின்ற விந்து அளவை அறியார்கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. 1421. விந்து ஜயம் - போக சரவோட்டம்1937பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தேசேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 11938தானே அருளால் சிவயோகம் தங்காதுதானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 21939மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டுஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 31940ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடுஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 41941செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமேஎய்யும் கலைகாலம் இந்து பருதிகால்நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறிசெய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 51942விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 61943கொண்ட குணனே நலமேநற் கோமளம்பண்டை உருவே பகர்வாய் பவளமேமிண்டு தனமே மிடைய விடும் போதில்கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 71944விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலேதொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதியகட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 81945பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்றுவார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியேசேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 91946வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லைவித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லைவித்தினில் வித்தை விதற உணர்வரேல்மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 101947கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்கருத்தது வித்தாய்க் காரண காரியம்கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 111948ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்அழியாப் பிராணன் அதிபலஞ் சத்திஒழியாத புத்தி தபஞ்செப மோனம்அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 121949வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்றுமுற்று மதியத்து அமுதை முறைமுறைசெற்றுண் பவரே சிவயோகி யாரே. 131950யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்ஆகிய விந்து அழியாத அண்ணலே. 141951அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்துஉண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 151952அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்அறிவாய் நனவில் அதீதம் புரியச்செறிவாய் இருந்து சேரவே வாயுமே. 161953மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்காதலது ஆகிய காமம் கழிந்திடும்சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 171954காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்காலங் களின்விந்து செற்றுற்ற காரிகைகாலின்கண் வந்த கலப்பறி யாரே. 181955கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தைவிலக்கு வனசெய்து மேலணை வீரே. 191956மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்கோலால் நடத்திக் குறிவழி யேசென்றுபாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 201957விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 211958விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்துநந்திய அங்கிய னாலே நயந்தெரிந்துஅந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 221959அமுதச் சசிவிந்து வாம்விந்து மாளஅமுதப் புனலோடி அங்கியின் மானஅமுதச் சிவயோகம் ஆதலால் சித்திஅமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 231960யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்துஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்போகம் சிவபோகம் போகிநற் போகமாமோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 241961மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்துகாதலி னால்விடார் யோகம் கலந்தவர்மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 251962சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்ஏற்றிய மூலத் தழலை எழமூட்டிநாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடுஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 261963விந்துவும் நாதமும் மேலக் கனல்மூலவந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்சிந்தனை மாறச் சிவம்அக மாகவேவிந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 271964வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 281965அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டுமன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டுமின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிடவன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 291966அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்துதன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 301967நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவைசென்று பராசக்தி விந்து சயந்தன்னைஒன்ற உரைக்க உபதேசம் தானே. 311968தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லைவானே உயர்விந்து வந்த பதினான்குமானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்தானே சிவகதி தன்மையும் ஆமே. 321969விந்துவும் நாதமும் விளைய விளைந்ததுவந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்விந்து அடங்க விளையும் சிவோகமே. 331970வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றிநிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையைஅறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையைஅறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 341971விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்சந்திர னோடே தலைப்படு மாயிடில்சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 351972மனத்தொடு சத்து மனஞ்செவி யென்னஇனத்தெழு வார்கள் இசைந்தன நாடிமனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 361973சத்தமும் சத்த மனமும் மனக்கருத்துஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்குஅத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 371974உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கிகருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. 3822. ஆதித்த நிலை - அண்டாதித்தன்1975செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடிதஞ்சுட ராக வணங்கும் தவமே. 11976பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்இகலற ஏழுல கும்உற வோங்கும்பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 21977ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 31978தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 41979வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 51980ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்கேத முறுங்கேணி சூரியன் எட்டில்சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 61981ஆதித்த னோடே அவனி இருண்டதுபேதித்த நாலும் பிதற்றிக் கழிந்ததுசோதிக்குள் நின்று துடியிடை செய்கின்றவேதப் பொருளை விளங்குகி லீரே. 71982பாருக்குக் கீழே பகலோன் வரும்வழியாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. 81983மண்ணை இடந்துஅதின் கீழொடும்விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. 91984பாரை இடந்து பகலோன் வரும்வழியாரும் அறியார் அருங்கடை நூலவர்தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 1023. பிண்டாதித்தன்1985நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்கொன்று மலங்கன் குழல்வழி ஓடிடவென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 11986ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டுசாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்தனோடே அடங்குகின் றாரே. 21987உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்துசொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லைசொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்குஉருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 324. மன ஆதித்தன்1988எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்பவிரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவிஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 11989சந்திரன் சூரியன் தான்வரின் பூசனைமுந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறைஅந்த இரண்டும் உபய நிலத்தில்சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 21990ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதிஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்றஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 31991ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளிஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வதுபேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றுஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 41992ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லைமுன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 525. ஞானாதித்தன்1993விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்துஅந்த அபரம் பரநாத மாகியேவந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்துஉந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 11994உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்குஉள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 21995தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்மூவர் பிரான்என முன்னொரு காலத்துநால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. 31996பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தைமையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறுசெய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. 41997தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்கஅனித்திடும் மேலை அருங்கனி ஊறல்கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 51998நேரறி வாக நிரம்பிய பேரொளிபோரறி யாது புவனங்கள் போய்வரும்தேரறி யாத திசையொளி யாயிடும்ஆரறி வாரிது நாயக மாமே. 61999மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 72000நாபிக்கண் நாசிநயன நடுவினும்தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 826. சிவாதித்தன்2001அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 12002கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்துஅடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 22003தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்தானே வெளியொளி தானிருட் டாமே. 32004தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்வையம் புனல்அனல் மாருதம் வானகம்சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 427. பசு இலக்கணம்2005உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்பன்னு மறைகள் பயிலும் பரமனைஎன்னுள் இருக்கும் இளையா விளக்கினைஅன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 12006அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்பின்ன மடஅன்னம் பேறணு காதே. 228. புருடன்2007வைகரி யாதியும் மாயா மலாதியும்பொய்கரி யான புருடாதி பேதமும்மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 12008அணுவில் அணுவினை ஆதிப் பிரானைஅணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவில் அணுவை அணுகவல் லார்கட்குஅணுவில் அணுவை அணுகலும் ஆமே. 22009படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்யஇடர்கொண்ட பாச இருளற ஒட்டிநடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 32010அணுவுள் அவனும் அவனுள் அணுவும்கணுஅற நின்ற கலப்பது உணரார்இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்தணிவற நின்றான் சராசரம் தானே. 429. சீவன்2011மேவிய சீவன் வடிவது சொல்லிடில்கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டுமேவிய கூறது ஆயிரம் ஆயினால்ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. 12012ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறைஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்தானே அறியும் தவத்தின் அளவே. 22013உண்டு தெளிவன் உரைக்க வியோகமேகொண்டு பயிலும் குணமில்லை யாயினும்பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. 32014மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்துஆய குருஅரு ளாலே அதில்தூண்டஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்ஆய துரியம் புகுந்தறி வாகவே. 430. பசு2015கற்ற பசுக்கள் கதறித் திரியினும்கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 12016கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டிவல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லதுகொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 231. போதன் (அறிஞன்)2017சீவன் எனச்சிவன் என்னவே றில்லைசீவ னார்சிவ னாரை அறிகிலர்சீவ னார்சிவ னாரை அறிந்தபின்சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 12018குணவிளக் காகிய கூத்தப் பிரானும்மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்பணவிளக் காகிய பல்தலை நாகம்கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 22019அறிவாய் அறியாமை நீங்கி யவனேபொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 32020ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்குஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்திஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 42021சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்தவமான செய்து தலைப்பறி கின்றார்நவமான தத்துவம் நாடாகி லாரே. 52022நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. 632. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை2023ஆக மதத்தன ஐந்து களிறுளஆக மதத்தறி யோடுஅணை கின்றிலபாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 12024கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயாஎருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கேவருத்தினும் அம்மா வழிநட வாதே. 22025புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்துகுலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. 32026அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வனஅஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 42027ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. 52028சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குளவெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. 62029எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறைஎண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 72030விதியின் பெருவலி வேலைசூழ் வையம்துதியின் பெருவலி தொல்வான் உலகம்மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கைநிதியின் பெருவலி நீர்வலி தானே. 833. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை2031குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வனபட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்துஇட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 12032கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்அடக்க லுறும் அவன்தானே அமரன்விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தைநடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 22033அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலைஅஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டுஅஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 32034முழக்கி எழுவன மும்மத வேழம்அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 42035ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவதுஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவதுஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவதுஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 52036பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 62037இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்தகிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 72038பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளிசார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டுவாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 82039நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 92040சென்றன நாழிகை நாள்கள் சிலபலநின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்துவென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 102041போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனைஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 112042தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளேஅரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 122043கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்எய்தி அவனை இசையினால் ஏத்துமின்ஐவருடைய அவாவினில் தோன்றியபொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 1334. அசற்குரு நெறி2044உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்கணுவின்றி வேதா கமநெறி காணான்பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 12045மந்திர தந்திர மாயோக ஞானமும்பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டுஅந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 22046ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்காமாதி நீங்காக் கலதி கலதிகட்குஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்கோமான் அலன்அசத் தாகும் குரவனே. 32047கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றேமுற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 42048குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவேகுருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 535. சற்குரு நெறி2049தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குருதாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 12050தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 22051கறுத்த இரும்பே கனகமது ஆனால்மறித்துஇரும் பாகா வகையது போலக்குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 32052பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்நேசத்து நாடி மலமற நீக்குவோர்ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 42053நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்றநேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனேஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்றநேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 52054பரிசன வேதி பரிசித்தது எல்லாம்வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்குருபரி சித்த குவலயம் எல்லாம்திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 62055தானே எனநின்ற சற்குரு சந்நிதிதானே எனநின்ற தன்மை வெளிப்படில்தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 72056வரும்வழி போம்வழி மாயா வழியைக்கருவழி கண்டவர் காணா வழியைக்பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்குருவழியே சென்று கூடலும் ஆமே. 82057குருஎன் பவனே வேதாக மங்கூறும்பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்துஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கிவருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 92058சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 102059ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினைபற்றறு நாதன் அடியில் பணிதலால்சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 112060எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியேசெலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. 122061ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்றுமோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 132062அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 142063ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலைநேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறைதேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 152064மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்ததுபேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்தஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 162065அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்கஇசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறேஅசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கேஇசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 172066ஏறு நெறியே மலத்தை எரித்தலால்ஈறில் உரையால் இருளை அறுத்தலான்மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுககூறு பரனே குருவாம் இயம்பிலே. 1836. கூடா ஒழுக்கம்2067கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்கண்காணி கண்டார் களஒழிந் தாரே. 12068செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 22069பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளதுவித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. 32070வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லைநடக்க உறுவரே ஞானமி ல்லாதார்வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 42071காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 52072கண்காணி யாகவே கையகத் தேயெழும்கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்கண்காணி யாகிய காதலன் தானே. 62073கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறைமன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறைதன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறைஎன்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 72074காணாத கண்ணில் படலமே கண்ணொளிகாணாத வர்கட்கும் காணாதது அவ்வொளிகாணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்காணாது கண்டார் களவொழிந் தாரே. 82075பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதிஉய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளிஅத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 92076பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 102077ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்குஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடாஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. 112078உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. 122079உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வைஅயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. 132080உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்சிலவாணி யாகிய தேவர் பிரானைத்தலைவாணி செய்வது தன்னை அறிவதே. 142081தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழிகோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 152082உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லைநல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே. 162083இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்வந்தன சூக்க உடலன்று மானதுதந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 1737. கேடு கண்டு இரங்கல்2084வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 12085போது சடக்கெனப் போகின் றதுகண்டும்வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவதுநீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்துஆதியை அன்பில் அறியகில் லார்களே. 22086கடன்கொண்டு நெற்குத்துக் கையரைஉடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறிஇடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 32087விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்துபுரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்னபரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 42088நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்அன்றி உலகம் அதுஇது தேவுஎன்றுகுன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 52089இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்துஇன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்துதுன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்றுதுன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 62090பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்பெறுதற்கு அரிய பிரானடி பேணார்பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 72091ஆர்வ மனமும் அளவில் இளமையும்ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்தீர வருவதோர் காமத் தொழில்நின்றுமாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 82092இப்பரி சேஇள ஞாயிறு போலுருஅப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானைஇப்பரி சேகம லத்துறை ஈசனைமெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே. 92093கூடகில் லார்குரு வைத்த குறிகண்டுநாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்துஆடவல் லார்அவர் பேறெது வாமே. 102094நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 112095மிருக மனிதர் மிக்கோர் பறவைஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லைபருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. 122096நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லைஆதி பயனென்று அமரர் பிரான்என்றநாதியே வைத்தது நாடுகின் றேனே. 132097இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டுபெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்வருந்தேன் நுகராது வாய்புகு தேனைஅருந்தேனை யாரும் அறியகி லாரே. 142098கருத்தறி யாது கழிந்தன காலம்அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 152099குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்தவிதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 162100கரைஅருகு ஆறாக் கழனி வளைந்ததிரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 172101வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்துஇரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியைஅரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்றுவிரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 1838. இதோபதேசம்2102மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவிஇறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. 12103செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையைவல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையைஇல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறைநல்ல அரநெறி நாடுமின் நீரே. 22014ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமனில்லை நாணாமேசென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்துநின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. 32105போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனைநாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டுகூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 42106இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்றுஅக்காலம் உன்ன அருள்பெற லாமே. 52107போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்சாகின்ற போதும் தலைவனை நாடுமின்ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. 62108பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 72109கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்குநீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 82110விடுகின்ற சிவனார் மேல்எழும் போதுநடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 92111ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்றுநீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடிவேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 102112இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனைஅன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்துபண்புறு வீர்பிற வித்தொழி லேநின்றுதுன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 112113மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டுமேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டுமேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டுமேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. 122114சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. 132115முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையைஎத்தனை காலமும் ஏத்துவர் ஈசனைநெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்அத்தகு சோதி அதுவிரும் பாரே. 142116நியமத்த னாகிய நின்மலன் வைத்தஉகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. 152117இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனைவிஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னைநஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. 162118பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னிவஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மைஅஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 172119சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லைஅவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்குருவை வழிபடின் கூடலும் ஆமே. 182120நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்கருமங்க ளாலே கழிதலில் கண்டுகுருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 192121ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புறமேற்கொண்டவர்வினை போயற நாடொறும்நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே. 20ஏழாம் தந்திரம் முற்றிற்று---------