திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்) (3)
திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்) (3)
tirumantiram of tirumUlar - part IIIc (2649-3047)(in Tamil Script, unicode/UTF-8 format)திருமந்திரம் (திருமூலர்)ஒன்பதாம் தந்திரம் (2649-3047)This webpage with Tamil Text is based on Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
http://www.projectmadurai.org/திருமந்திரம்ஒன்பதாம் தந்திரம்1. குருமட தரிசனம்2649பலியும் அவியும் பரந்து புகையும்ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 12650இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லைஅவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 22651நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடிதேட அரியன் சிறப்பிலி எம்இறைஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 32652இயம்புவன் ஆசனத் தோடு மலையும்இயம்புவன் சித்தக் குகையும் இடமும்இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 42653முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சிஅகம்பர மாதனம் எண்எண் கிரியைசிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 52654அகமுக மாம்பீடம் ஆதார மாகும்சகமுக மாம்சத்தி யாதன மாகும்செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 62655மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியேதூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 72. ஞானகுரு தரிசனம்2656ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 12657துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதிஅரிய பரசிவம் யாவையும் ஆகிவிரிவு குவிவுஅற விட்ட நிலத்தேபெரிய குருபதம் பேசஒண் ணாதே. 22658ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. 32659கருடன் உருவம் கருதும் அளவில்பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்குருவின் உருவம் குறித்த அப் போதேதிரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 42660அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்குஅண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. 52661தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்மான்ற அறிவு மறிநன வாதிகள்மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றறஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. 62662சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்பந்தம் இலாத பளிங்கின் உருவினள்பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. 72663மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழநிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்கவனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. 82664தானான வண்ணமும் கோசமும் சார்தரும்தானாம் பறவை வனமெனத் தக்கனதானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. 92665மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்திஉருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்குஅருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. 102666தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டுநிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்தலைப்பட லாகும் தருமமும் தானே. 112667நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. 122668தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னைவிலக்குறின் மேவை விதியென்றும் கொள்கஅனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானைநினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. 132669நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கிநிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளேபுகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. 142670வந்த மரகத மாணிக்க ரேகைபோல்சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்இந்த இரேகை இலாடத்தின் மூலத்தேசுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. 152671உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்கண்ணுமா யோகக் கடவுள் இருப்பதுமண்ணு நீரனல் காலொடு வானுமாய்விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. 162672பரசு பதியென்று பார்முழு தெல்லாம்பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்குஉரிய பதியும்பா ராக்கி நின்றானே. 172673அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்தம்பர மல்லது தாமறியோம் என்பர்உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. 182674கோவணங் கும்படி கோவண மாகிப்பின்நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 193. பிரணவ சமாதி2675தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரைபாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 12676ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழிஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅருஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. 22677ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றனஓங்கார சீவ பரசிவ ரூபமே. 32678வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்அருக்கம் சராசரம் ஆகும் உலகில்தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனிசுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. 42679மலையும் மனோபவம் மருள்வன ஆவனநிலையில் தரிசனம் தீப நெறியாம்தலமும் குலமும் தவம்சித்த மாகும்நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. 52680சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்குஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்துஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 64. ஒளி2681ஒளியை அறியில் உருவும் ஒளியும்ஒளியும் உருவம் அறியில் உருவாம்ஒளியின் உருவம் அறியில் ஒளியேஒளியும் உருக உடனிருந் தானே. 12682புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலேஇகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 22683விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்துளங்கொளி பெற்றன சோதி யருளவளங்கொளி பெற்றதே பேரொளி வேறுகளங்கொளி செய்து கலந்து நின்றானே. 32684இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லிதுளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றிவிளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 42685மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 52686மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளிபன்னிய ஞானம் பரந்து பரத்தொளிதுன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 62667விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்துதுளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்றவளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 72688விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்களங்கொளி ஈசன் கருத்தது தானே. 82689இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்துலங்கொளி போல்வது தூங்கருட் சத்திவிளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றிஉளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. 92690உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதிவிளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கிவளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 102691விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்ததுளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆடவிளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 112692போது கருங்குழற் போனவர் தூதிடைஆதி பரத்தை அமரர் பிரானொடும்சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளிநீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 122693உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிதுபண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 132694சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கேபடருறு காட்சிப் பகலவன் ஈசன்அடருறு மாயையின் ஆரிருள் வீசில்உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. 142695ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்களிபவ ளத்தினன் காரிருள் நீங்கிஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 152696ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்றதேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்பாசம்ஒன் றாகப் பழவினை பற்றறவாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 162697தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்தானே யிருக்கும் அவனென நண்ணிடும்வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 175. தூல பஞ்சாக்கரம்2698ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 12699அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகிஉகார முதலாக ஓங்கி உதித்துமகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறிநகார முதலாகும் நந்திதன் நாமமே. 22700அகராதி ஈரெண் கலந்த பரையும்உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்சிகராதி தான்சிவ வேதமே கோணம்நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 32701வாயொடு கண்டம் இதயம் மருவுந்திஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 42702கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்கரணங்கள் விட்டுயிர் தானெழும் போதுமரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 52703ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 62704தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்றுஉள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 72705குருவழி யாய குணங்களில் நின்றுகருவழி யாய கணக்கை அறுக்கவரும்வழி மாள மறுக்கவல் லார்கட்குஅருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 82706வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போதுசெறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 92707நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்றுதுஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்றுமஞ்சு தவழும் வடவரை மீதுரைஅஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 102708பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராதுஇராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 116. சூக்கும பஞ்சாக்கரம்2709எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனைஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்தெளிய ஒதிச்சிவாயநம என்னும்குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 12710சிவன்சத்தி சீவன் செறுமல மாயைஅவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேரஅவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 22711சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயைசிவன்முத லாகச் சிறந்து நிரோதம்பவமது அகன்று பரசிவன் ஆமே. 32712ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. 42713நமாதி நனாதி திரோதாயி யாகித்தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவேநமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. 52714அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயைதிரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. 62715சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 72716சிவசிவ என்கிலர் தீவினை யாளர்சிவசிவ என்றிடத் தீவினை மாளும்சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்சிவசிவ என்னச் சிவகதி தானே. 82717நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்பவமது தீரும் பரிசும்அது அற்றால்அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 97. அதிசூக்கும பஞ்சாக்கரம்2718சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கிஅவாயம் அறவே அடிமைய தாக்கிச்சிவாய சிவசிவ என்றென்றே சிந்தைஅவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 12719செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டுதுஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனைநெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 22720அங்கமும் ஆகம வேதமது ஓதினும்எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பதுசங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 32721பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளேவிழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லைஎழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 48.1 திருக்கூத்து தரிசனம்2722எங்கும் திருமேனி எங்கும் சிவசத்திஎங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 12723சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனைஅற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 28.2 சிவானந்தக் கூத்து2724தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்குஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 32725ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்ஆனந்தம் ஆக அகில சராசரம்ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 42726ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்அளியார் சிவகாமி யாகும் சமயக்களியார் பரமும் கருதுறை யந்தக்தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. 52727ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்ஆன நடமாடி ஐங்கரு மத்தாகஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தேதேன்மொழி பாகன் திருநட மாடுமே. 62728பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்டமூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்டதாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்துஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 72729வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்பூதங்கள் ஆடப் புவனம் முழுதாடநாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 82730பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 92731தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்தாபதர் சத்தர் சமயம் சராசரம்யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 108.3 சுந்தரக் கூத்து2732அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்கண்டம் கரியான் கருணை திருவுருக்கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 112733கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லைவடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 122734பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 132735அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 142736ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடிமூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லாஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 152737சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 162738மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 178.4 பொற்பதிக் கூத்து2739தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 182740அடிஆர் பவரே அடியவர் ஆமால்அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரேஅடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர்அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். 192741அடங்காத என்னை அடக்கி அடிவைத்துஇடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டுநடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 202742உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனைஇன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 212743மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனைஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 222744விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 232745தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்தநாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 242746காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடிநீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடிநாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 252747மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடுஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 262748பூதல மேருப் புறத்தான தெக்கணம்ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்பாதி மதியோன் பயில்திரு அம்பலம்ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 278.5 பொற்றில்லைக்கூத்து2749அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 282750குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்துபுரானந்த போகனாய்ப் பூவையும் தானும்நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 292751ஆதி பரன்ஆட அங்கைக் கனலாடஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்பாதி மதியாடப் பாரண்ட மீதாடநாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 302752கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 312753மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழுசாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டுநாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 322754இடைபிங் கலைஇம வானோடு இலங்கைநடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனைகடவும் திலைவனம் கைகண்ட மூலம்படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 332755ஈறான கன்னி குமரியே காவிரிவேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்பேறான வேதா கமமே பிறத்தலான்மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 342756நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடிவேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடிபோதத்தில் ஆடி புவனம் முழுதாடும்தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 352757தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடிமூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 362758ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்கூறு சமயக் குருபரன் நானென்றும்தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளேவேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 372759அம்பலம் ஆடரங் காக அதன்மீதேஎம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளிஉம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 382760ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்பாடிய பாட்டும் பலவான நட்டமும்கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 392761இருதயம் தன்னில் எழுந்த பிராணன்கரசர ணாதி கலக்கும் படியேஅரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 408.6 அற்புதக் கூத்து2762குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்அருவுரு வாவது அந்த அருவேதிரிபுரை யாகித் திகழ்தரு வாளும்உருவரு வாகும் உமையவள் தானே 412763திருவழி யாவது சிற்றம் பலத்தேகுருவடி வுள்ளாக்குனிக்கும் உருவேஉருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்குஅருள்வழி யாவதும் அவ்வழி தானே. 422764நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திடநாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்துஆடும் இடந்திரு அம்பலந் தானே. 432765வளிமேகம் மின்வில்லு வானகஓசைதெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 442766தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்மாயைமா மாயை கடந்துநின் றார்காணநாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. 452767கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 462768இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 472769சத்தி வடிவு சகல ஆனந்தமும்ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டுஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 482770நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளிஉற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 492771அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்தெண்டினில் ஏழும் சிவாசன மாகவேகொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 502772மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்நன்றிது தான்இதழ் நாலொடு நூறவைசென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுளநின்றது தான்நெடு மண்டல மாமே. 512773அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடிதெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடிஎண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடிஅண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 522774ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாகமாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 532775அம்பல மாவது அகில சராசரம்அம்பல மாவது ஆதிப் பிரானடிஅம்பல மாவது அப்புத்தீ மண்டலம்அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 542776கூடிய திண்முழ வம்குழல் ஓமென்றுஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்னநாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 552777அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 562778புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 572779திண்டாடி வீழ்கை சிவானந்த மாவதுஉண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 582780அங்கி தமருகம் அக்குமா லைபாசம்அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்தங்குஉ பயந்தரு நீல மும்உடன்மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 592781ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடிநீடிய நாதம் பராற்பர நேயத்தேஆடிய நந்தி புறம்அகந் தானே. 602782ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆடஅன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாடஇன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆடஅன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 612783ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகிஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதிஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 622784மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியேமூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. 632785தாமுடி வானவர் தம்முடி மேலுறைமாமணி ஈசன் மலரடித் தாளினைவாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்காமணி ஞாலம் கடந்துநின் றானே. 642786புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தைபுரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 652787ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 662788ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்துஅன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவேஅன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 672789தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்சித்தமும் ஆடச் சிவசத்தி தானாடவைத்த சராசரம் ஆட மறையாடஅத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 682790இருவருங் காண எழில்அம் பலத்தேஉருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 692791சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்அவமாட ஆடாத அம்பரம் ஆடநவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 702792நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்துநாதப் பிரமம் சிவநாட மாமே. 712793சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 722794கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள்வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளிஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 732795நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பிபூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்நேதத் துவமும் அவற்றோடு நேதியும்பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 742796ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 752797திருந்துநல் சீஎன்று உதறிய கையும்அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 762798மருவும் துடியுடன் மன்னிய வீச்சுமருவிய அப்பும் அனலுடன் கையும்கருவின் மிதித்த கமலப் பதமும்உருவில் சிவாய நமவென வோதே. 772799அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயிஅரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 782800தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளிகூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 792801நந்தியை எந்தையை ஞானத் தலைவனைமந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்துஅந்தர வானத்தின் அப்புறத்து அப்பரசுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 802802சீய குருநந்தி திருஅம்ப லத்திலேஆயுறு மேனியை யாரும் அறிகிலர்தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மைஆயுறு மேனி அணைபுக லாமே. 812803தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சைஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்ஆனால் அரனடி நேயத்த தாமே. 829. ஆகாசப் பேறு2804உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனைஉள்ளத்து ளேயங்கி யாய ஒருவனைஉள்ளத்து ளேநீதி யாய ஒருவனைஉள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 12805பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 22806அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையைஉண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்ததுகொண்ட குறியைக் குலைத்தது தானே. 32807பயனறு கன்னியர் போகத்தின் உள்ளேபயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதிஅயனொடு மால்அறி யாவகை நின்றிட்டுஉயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 42808அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 52809ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்துஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 62810உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்கஉயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போதுகுயில்கொண்ட பேதை குலாவி உலாவிவெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 72811நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்துஅணுகில் அகன்ற பெரும்பதி நந்திநணுகிய மின்னொளி சோதி வெளியைப்பணியின் அமுதம் பருகலும் ஆமே. 82812புறத்துளா காசம் புவனம் உலகம்அகத்துளா காசம்எம் ஆதி அறிவுசிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதிசகத்துளா காசம் தானம்ச மாதியே. 910. ஞானோதயம்2813மனசந் தியில்கண்ட மனநன வாகும்கனவுற ஆனந்தம் காண்டல் அதனைவினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்பஇனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 12814கரியட்ட கையன் கபாலம்கை யேந்திஎரியும் இளம்பிறை சூடும்எம் மானைஅரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 22815மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்தக்கார் உரைத்த தவநெறியே சென்றுபுக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தைநக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 32816விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றிவிளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டிவிளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்குவிளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 42817தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டுதத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லைதத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 52818விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளேஅசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்பசும்பொன் திகழும் படர்சடை மீதேகுசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 62819முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியைஎத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 72820நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பதுநான்என்ற ஞான முதல்வனே நல்கினான்நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 82821ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறிஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 92822உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமேஉய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமேஉய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 102823காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்திஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 112824ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடிஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 1211. சத்திய ஞானானந்தம்2825எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகிமுப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியேஇப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 12826தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 22827மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயைஅன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறதுஇன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 32828சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்வைத்த சொருபத்த சத்தி வருகுருஉய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 42829உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபைதரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 52830நினையும் அளவில் நெகிழ வணங்கிப்புனையில் அவனைப் பொதியலும் ஆகும்எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டிநினையும் அளவில் நினைப்பித் தனனே. 62831பாலொடு தேனும் பழத்துள் இரதமும்வாலிய பேரமு தாகும் மதுரமும்போலும் துரியம் பொடிபடி உள்புகச்சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 72832அமரத் துவம்கடந்து அண்டம் கடந்துதமரத்து நின்ற தனிமையன் ஈசன்பவளத்து முத்தும் பனிமொழி மாதர்துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 82833மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 92834சிவமாய் அவமான மும்மலம் தீரப்பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்தவமான சத்திய ஞானானந் தத்தேதுவமார் துரியம் சொரூபம் தாமே. 1012. சொரூப உதயம்2835பரம குரவன் பரம்எங்கு மாகித்திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்றுநிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்அரிய துரியத்து அணைந்துநின் றானே. 12836குலைக்கின்ற நீரின் குவலய நீரும்அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்நிலத்திடை வானிடை நீண்டகன் றானைவரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 22837அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறைபொங்கிநின் றான்புவ னாபதி தானே. 32838சமயச் சுவடும் தனையறி யாமல்சுமையற்ற காமாதி காரணம் எட்டும்திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 42839மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உருவாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்சேய சிவமுத் துரியத்துச் சீர்பெறஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 52840உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்கருவன்றி யேநின்று தான்கரு வாகும்அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 62841உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதிஉருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 72842பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 82943சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கிஅரியன உற்பலம் ஆமாறு போலமருவிய சத்தியாதி நான்கும் மதித்தசொரூபக்குரவன் சுகோதயத் தானே. 92944உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்கரையற்ற சத்தியாதி காணில் அகாரமருவுற்று உகாரம் மகாரம தாகஉரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 102845தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்துமுலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்துகலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 112846ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றேஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லைநாமாம் முதல்வனும் நான்என லாமே. 1213. ஊழ்2847செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்வித்தகன் நந்தி விதிவழி யல்லதுதத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 12848தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லைகோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்றுநான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 22849ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதேகூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லைநீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 32850வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 42851ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்தஞானத்து உழவினை நான்உழு வேனே. 52852கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்நாடு கெடினும் நமர்கெடு வாரில்லைவீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்பாடது நந்தி பரிசறி வார்க்கே. 614. சிவ தரிசனம்2853சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லைசிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 12854வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிதுபோக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லையாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 22855பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்றுஉரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணாஅரனாய் உலகில் அருள்புரிந் தானே. 315. சிவ சொரூப தரிசனம்2856ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரியபேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலைவேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 12857உணர்வும் அவனே உயிரும் அவனேபுணரும் அவனே புலவி அவனேஇணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 22858துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்முன்னி அவர்தம் குறையை முடித்திடும்மன்னிய கேள்வி மறையவன் மாதவன்சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 32859மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்தன்னுற்ற சோதி தலைவன் இணையிலிபொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 42860சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளிசுத்தப் பிரம துரியம் துரியத்துள்உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 52861பரன்அல்ல நீடும் பராபரன் அல்லஉரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்லதரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 62862முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமாசத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. 72863துரிய அதீதம் சொல்லறும் பாழாம்அரிய துரியம் அதீதம் புரியில்விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 816. முத்தி பேதம், கரும நிருவாணம்2864ஓதிய முத்தியடைவே உயிர்பரபேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடுஆதி சொரூபம் சொரூபத்த தாகவேஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 12865பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 217. சூனிய சம்பாஷணை2866காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்ஏய பெருமான்இருந்து பொருகின்றமாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 12867தூறு படர்ந்து கிடந்தது தூநெறிமாறிக் கிடக்கும் வகையறி வாரில்லைமாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்குஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 22868ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்சாறுபடுவன நான்கு பனையுளஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனைஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 32869வழுதலை வித்திடப் பாகன் முளைத்ததுபுழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்ததுதொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 42870ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லைமையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 52871பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுளகள்ளச்செய் அங்கே கலந்து கிடந்ததுஉள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்குவெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. 62872மூவணை ஏரும் உழுவது முக்காணிதாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்நாஅணைகோலி நடுவில் செறுஉழார்காலணை கோலிக்களர்உழு வாரே. 72873ஏற்றம் இரண்டுள ஏழு துரவுளமூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 82874பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுளகுட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துளகுட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 92875ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுளஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்துமாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 102876தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்ததுவட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 112877அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனிதிரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டிவரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 122878இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையைமிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 132879விளைந்து கிடந்தது மேலைக்கு வித்ததுவிளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்குவிளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 142880களர்உழு வார்கள் கருத்தை அறியோம்களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்களர்உழு வார்கள் களரின் முளைத்தவளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 152881கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்துஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டுநாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழைஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 162882மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்குலைமேல் இருந்த கொழுங்கனி வீழஉலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 172883பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டுமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவனமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. 182884ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளனமூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 192885எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓதமலராத பூவின் மணத்தின் மதுவைப்பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 202886போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனிஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 212887மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டுவேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றிவேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 222888பத்துப் பரும்புலி யானை பதினைந்துவித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர்அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 232889இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளேஇரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 242890ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 252891கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்நாகையும் பூழும் நடுவில் உறைவனநாகையைக் கூகை நணுகல் உறுதலும்கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 262892குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 272893காடுபுக் கார்இனிக் காணார் கருவெளிகூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்மூடு புகாவிடின் மூவனை யாமே. 282894கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்காறையும் நாணும் வளையலும் கண்டவர்பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 292895துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 302896பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்திருந்திய மாதர் திருமணப் பட்டார்பெருந்தவப் பூதம் போலுரு வாகும்இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 312897கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்றபாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 322898இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லைதலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 332899அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டுநக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 342900கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 352901கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடைஎட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 362902பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்டபெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 372903கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியேவல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லதுகொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 382904தட்டத்து நீரிலே தாமரை பூத்ததுகுட்டத்து நீரில் குவளை எழுந்ததுவிட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 392905ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளனநூறு பறவை நுனிக்கொம்பின் மேலனஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்மாறுதல் இன்றி மனைபுக லாமே. 402906கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 412707ஏழு வளைகடல் எட்டுக் குலவரையாழும் விசும்பினில் அங்கி மழைவளிதாழு மிருநிலந் தன்மை ய்துகண்டுவாழ நினைக்கில தாலய மாமே. 422908ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 432909கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 442910கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 452911கோரை எழுந்து கிடந்த குளத்தினில்ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்ததுநாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 462912கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்எல்லை மயங்கிக் கிடந்த இருநெறிஎல்லை மயங்காது இயங்க வல் லார்கட்குஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. 472913உழவொன்று வித்து ஒருங்கின காலத்துஎழுமழை பெய்யாது இருநிலச் செல்விதழுவி வினைசெய்து தான்பய வாதுவழுவாது போவன் வளர்சடை யோனே. 482914பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவமதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. 492915தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்குவாணிபம் செய்து வழங்கி வளர்மகன்நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்துஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 502916முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தனபக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 512917அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்திமுடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்துமடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 522918பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 532919மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 542920நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்யாவரும் என்றும் அறியவல் லார்இல்லைகூரும் மழைபொழி யாது பொழிபுனல்தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 552921கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்துநாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 562922வாழையும் சூரையும் வந்திடம் கொண்டனவாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டுவாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. 572923நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாதுஅருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 582924தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 592925குடைவிட்டுப் போந்தது கோயில் எருமைபடைகண்டு மீண்டது பாதி வழியில்உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 602926போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்நாகமும் எட்டொடு நாலு புரவியும்பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 612927பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்தூசி மறவன் துணைவழி எய்திடப்பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 622928கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டுகொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டுவம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 632929வீணையும் தண்டும் விரவி இசைமுரல்தாணுவும் மேவித் தருதலைப் பெய்ததுவாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 642930கொங்குபுக் காரொடு வாணிபம் செய்ததுவங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 652931போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டதுதாதவிழ் புன்னை தயங்கும் இருகரைஏதமில் ஈசன்இயங்கு நெறியிதுமாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 662932கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலேகாமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்வீவற்ற எல்லை விடாது வழிகாட்டியாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. 672933தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுகாட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 682934புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்புலம்பின் அவளொடும் போகம் நுகரும்புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 692935தோணி ஒன்று உண்டு துறையில் விடுவதுவாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடைஆணி கலங்கில் அதுஇது வாமே. 7018. மோன சமாதி2936நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லைசென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டுசென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 12937காட்டும் குறியும் கடந்த அக் காரணம்ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லதுஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 22938உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லைஉணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 32939மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. 42940துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதிஅரிய துரியம் அதன்மீது மூன்றாய்விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தேஉரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 52941உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லிதிருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்பொருவிலி பூதப் படையுடை யாளிமருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 62942கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியைஎண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்தொண்டர் முகந்த துறையறி யோமே. 72943தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்லநிட்களம் அல்ல சகள நிலையல்லஅற்புத மாகி அனுபோகக் காமம்போல்கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 82944முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடியசுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. 92945அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமைஎப்படி அப்படி என்னும் அவ்வாறே. 102946கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவைபெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்கொண்டான் அறிவன் குணம்பல தானே. 112947நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலேசந்தி சமாதிகள் தாமே ஒழிந்தனஉந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. 122948விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்துபதறு படாதே பழமறை பார்த்துக்கதறிய பாழைக் கடந்ததக் கற்பனைஉதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 132949வாடா மலர்புனை சேவடி வானவர்கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்றுநாடார் அமுதுற நாடார் அமுதமே. 142950அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காணமதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. 152951தானும் அழிந்து தனமும் அழிந்துநீடுஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்வானும் அழிந்து மனமும் அழிந்துபின்நானும் அழிந்தமை நானறி யேனே. 162952இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகிஅருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கேஉருளாத கன்மனம் உற்றுநின் றேனே. 172953ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதிஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினைஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 1819. வரையுரை மாட்சி2954தான்வரைவு அற்றபின் ஆரை வரைவதுதான்அவ னானபின் ஆரை நினைவதுகாமனை வென்றகண் ஆரை உகப்பதுதூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 12955உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோதிரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 22956மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லைபினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டாதனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 320. அணைந்தோர் தன்மை2957மலமில்லை மாசில்லை மானாபி மானம்குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லைநலமில்லை நந்தியை ஞானத்தி னாலேபலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 12958ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 22959ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொருகோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. 32960ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்சீராடி அங்கே திரிவதால் லால் இனியார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. 42961பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையைஅரிந்தேன் வினையை அயில்மன வாளால்முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. 52962ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவதுநன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. 62963சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. 72964பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லைவிண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. 82965அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லதுஅன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னைஅன்னையும் அத்தனும் யானும் உடனிருந்துஅன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. 92966கொண்ட சுழியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளேஉண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. 102967தானே திசையொடு தேவருமாய் நிற்கும்தானே வடவரை ஆதியுமாய நிற்கும்தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்தானே உலகில் தலைவனும் ஆமே. 112968நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே. 122969சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. 132970நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடிநினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. 142971சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்அவபெரு மான்என்னை யாளுடை நாதன்பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. 152972பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. 162973என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்துமுன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதிபின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. 172974பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. 182975சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டுஅவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. 192976கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. 202977உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. 212978மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்றுதூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணிமாண்டான் ஒருவன்கை வந்தது தானே. 222979ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டுநூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. 232980அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்என்பொன் மணியை இறைவனை ஈசனைத்தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. 242981மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்மனம்வி ரிந்து குவிந்தது வாயுமனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. 2521 தோத்திரம்2982மாயனை நாடி மனநெடும் தேரெறிப்போயின நாடறி யாதே புலம்புவர்தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. 12983மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்பன்னினர் என்றே பாடறி வீரே. 22984முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றைஎத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனைஅத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்பித்தன் இவனென்று பேசுகின் றாரே. 32985புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்திபுகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. 42986பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படுநீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 52987நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனைஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. 62988போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடிசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. 72989நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியைஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்வானோர் உலகம் வழிபட மீண்டபின்தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. 82990வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்சுந்தர மாதர் துழனியொன்று அல்லதுஅந்தர வானத்தின் அப்புறம் ஆமே. 92991மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. 102992மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 112993அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லைபுகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணிவகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. 122994வள்ளல் தலைவனை வானநன் னாடனைவெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்றுஉள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. 132995ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளைநாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. 142996விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. 152997வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்தானகம் இல்லாத் தனியாகும் போதகன்கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. 162998விதியது மேலை அமரர் உறையும்பதியது பாய்புனல் கங்கையும் உண்டுதுதியது தொல்வினைப் பற்றறு விக்கும்பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. 172999மேலது வானவர் கீழது மாதவர்தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்கானது கூவிள மாலை கமழ்சடைஆனது செய்யும்என் ஆருயிர் தானே. 183000சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனைஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலியாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. 193001உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றைஅலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே. 203002பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. 212903அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்தந்த உலகெங்கும் தானே பாராபரன்வந்து படைக்கின்ற மாண்பது வாமே. 222904முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடிமத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 232905ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. 243006அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. 253007உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழநிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னேபுலம்முழு பொன்னிற மாகிநின் றானே. 263008பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்தராபர னாய்நின்ற தன்மை யுணரார்நிராபர னாகி நிறைந்துநின் றானே. 273009போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லைஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்காற்றது ஈசன் கலந்து நின்றானே. 283010திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரேபுகையனைத் தும்புறம் அங்கியிற் கூடுமுகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 293011அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகிஇவன்தான் எனநின்று எளயனும் அல்லன்சிவன்தான் பலபல சீவனு மாகிநவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 303012கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்றதலைவனனை நாடுமின் தத்துவ நாதன்விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பஉரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. 313013படிகால் பிரமன்செய் பாசம் அறுத்துநெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கிஅடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 323014ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கினஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலிதேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்வாச மலர்போல் மருவி நின் றானே. 333015இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறைநல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணிசொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 343016உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 353017மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 363018விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே. 373219உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்நித்திலச் சோதியன் நீலக் கருமையன்எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 383020நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்புறம்பல காணினும் போற்றகி லாரே. 383021இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறுஎங்குநின் றான்மழை போல்இறை தானே. 403022உணர்வது வாயுவே உத்தம மாயும்உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்புணர்வது வாயும் புல்லிய தாயும்உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 413023தன்வலி யால்உல கேழும் தரித்தவன்தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்தன்வலி யாலே தடம்கட லாமே. 423024ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறைஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்தானே அறியும் தவத்தின் அளவே. 433025பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்ததுஉண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. 4422. சர்வ வியாபி3026ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளிஆயும் அறிவையும் மாயா உபாதியால்ஏய பரிய புரியும் தனதுஎய்தும்சாயும் தனது வியாபகம் தானே. 13027நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லைநான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 23028கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்துஉடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடிஉடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 33029பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 43030உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டுஇறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்திபெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. 53031பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளிநெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதருமற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே. 63032தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. 73033நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்காக்கும் அவனித் தலைவனும் அங்குளநீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலிபோக்கும் வரவும் புணரல் லானே. 83034செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனிஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. 93035உணர்வும் அவனே உயிரும் அவனேபுணர்வும் அவனே புலனும் அவனேஇணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 103036புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தைநலமையின் ஞான வழக்கமும் ஆகும்விலமையில் வைத்துள் வேதியர் கூறும்பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 113037விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 123038நின்றனன் மாலொடு நான்முகன் தானாகிநின்றனன் தான்நிலம் கீழொடு மேலெனநின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்நின்றனன் தானே வளங்கனி யாயே. 133039புவனா பதிமிகு புண்ணியன் எந்தைஅவனே உலகில் அடர்பெரும் பாகன்அவனே அரும்பல சீவனும் ஆகும்அவனே இறையென மாலுற்ற வாறே. 143040உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 153041எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்பண்ணும் திறனும் படைத்த பரமனைக்கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇதுஉண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. 163042இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்கருக்கொடு எங்கும் கலந்திருந் தானேதிருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 173043பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதிபலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 183044அதுஅறி வானவன் ஆதிப் புராணன்எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்பொதுஅது வான புவனங்கள் எட்டும்இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 193045நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறைஊரும் சகலன் உலப்பிலி தானே. 203046மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. 2123. வாழ்த்து3047வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடிவாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1.ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.திருமூலர் திருமந்திரம் முற்றிற்றுதிருச்சிற்றம்பலம்